• Nov 24 2025

கடுகண்ணாவ விபத்து; மேலும் நால்வர் உயிருடன் மீட்பு

Aathira / Nov 23rd 2025, 12:09 pm
image

கண்டி - கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், இடிபாட்டுக்குள் சிக்கிய மேலும் நான்கு பேர் மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கி இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கீழ் கடுகண்ணாவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் நேற்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது.

இதனையடுத்து, இடிபாட்டுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் நீடித்து வருகின்றன.

இதை தொடர்ந்து கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.


கடுகண்ணாவ விபத்து; மேலும் நால்வர் உயிருடன் மீட்பு கண்டி - கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், இடிபாட்டுக்குள் சிக்கிய மேலும் நான்கு பேர் மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் சிக்கி இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் கீழ் கடுகண்ணாவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் நேற்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது.இதனையடுத்து, இடிபாட்டுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் நீடித்து வருகின்றன.இதை தொடர்ந்து கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement