மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (22) மாலை 3 மணியளவில் தேசத்தின் புதல்வி செல்வி துவாரகாவின் வழிநடத்தலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மக்களின் ஆதரவுடன் யாழ்மாவட்டம் போராளி விடுதலையின் தலைமையில் யாழ்ப்பாணம் அராலி மத்தி ஊரத்தி அம்மன் ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மழைக்கு மத்தியில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
மாவீரர்களது பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக மாவீரர் கப்டன் பண்டிதர் அவருடைய தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அராலியில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (22) மாலை 3 மணியளவில் தேசத்தின் புதல்வி செல்வி துவாரகாவின் வழிநடத்தலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மக்களின் ஆதரவுடன் யாழ்மாவட்டம் போராளி விடுதலையின் தலைமையில் யாழ்ப்பாணம் அராலி மத்தி ஊரத்தி அம்மன் ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மழைக்கு மத்தியில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.மாவீரர்களது பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக மாவீரர் கப்டன் பண்டிதர் அவருடைய தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.இந் நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.