• Apr 25 2026

சுரேஷ் சலே பற்றி பேச வேண்டாமென குறிப்பிட சிறில் காமினிக்கு உரிமையில்லை! - சாமர சம்பத் சீற்றம்

Chithra / Mar 4th 2026, 9:51 am
image

 

கைது செய்யப்பட்டுள்ள  சுரேஷ் சலேவின் பிரச்சினை தொடர்பில்  அரசியல்வாதிகள்  கதைக்க வேண்டாம் என்று கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர்  சிறில் காமினி குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடுவதற்கு  அவருக்கு எவ்வித உரிமை கிடையாது  என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தான்தோன்றித்தனமாக தலைவர் நியமிக்கப்பட்டால் யுத்தம் போன்றவை தோற்றம் பெறும். அமெரிக்க ஜனாதிபதி  கடந்த காலங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் வரிகளை அறிவித்துக்கொண்டு சென்றார். அமெரிக்க உயர் நீதிமன்றமும் அது தவறு என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின்  தீர்ப்பையும் அவர் விமர்சித்தார். அவர் வெனிசுலாவுக்குள் புகுந்து  அந்த நாட்டுத் தலைவரை தூக்கிச் சென்றார்.


தற்போது ஈரானுக்கு தாக்குதல் நடத்துகின்றார். இவ்வாறான தான்தோன்றித்தனமான தலைவர்களால் அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளது. 


உலகில் எம்மைப் போன்ற அபிவிருத்தியடையாத வறுமை நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பு கூற வேண்டும். யுத்தத்தில் சீனா இணையலாம், ரஷ்யாவும் இணையலாம். இதனால் எம்மைப் போன்ற நாடுகளுக்கே பாதிப்புகள் ஏற்படும். 


முன்னாள்  இராணுவ  அதிகாரியான சலே கைது செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கூறுவதாயின் பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகின்றது. அவரிடம் பெற்ற தகவல்கள் என்ன என்று இதுவரையில் பாதுகாப்பு அமைச்சசரோ அல்லது பொலிஸாரோ கூறவில்லை. இப்போது சலே கைது செய்யப்பட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது  குற்றப்புலனாய்வுப் பிரிவின்  பிரதானி ரவி செனவிரட்ன, சானி அபேசேகர, கிழக்கு கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர ஆகியோரும்  பதவி வகித்துள்ளனர். 


இவர்கள் கடந்த தேர்தல் காலத்தில்  தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடையில் ஏறியதால் தற்போது உயர் பதவிகளில் உள்ளார்கள். அன்று  சலேவும்  அரசியல் மேடை ஏறியிருந்தால்  இன்று அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்திருப்பார்.


கிழக்கில் தொப்பிகலவில் யுத்தம் இடம்பெற்றபோது சலேவே யுத்தத்தை இரண்டாக பிளவுபடுத்தினார். கருணாவை கிழக்கிற்கும், வடக்கிற்கு பொட்டுஅம்மான் என்றும் பிரித்தார். இவரே அதனை செய்தார். யுத்த காலத்தில் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாமல் புலனாய்வு பிரிவில் பணியாற்ற முடியாது. முஸ்லிம்களே புலனாய்வு பிரிவில் பணியாற்றினர். 


கத்தோலிக்க சபையின் சிறீல் காமினி ஆயர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி சலேவின் பிரச்சினை தொடர்பில்  அரசியல்வாதிகள்  கதைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடுவதற்கு சிறில் காமினி ஆயருக்கு உரிமை கிடையாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சிறில் காமினியை விடவும் எமக்கு பெறுமதியானவர்களே என்றார்.

சுரேஷ் சலே பற்றி பேச வேண்டாமென குறிப்பிட சிறில் காமினிக்கு உரிமையில்லை - சாமர சம்பத் சீற்றம்  கைது செய்யப்பட்டுள்ள  சுரேஷ் சலேவின் பிரச்சினை தொடர்பில்  அரசியல்வாதிகள்  கதைக்க வேண்டாம் என்று கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர்  சிறில் காமினி குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடுவதற்கு  அவருக்கு எவ்வித உரிமை கிடையாது  என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தான்தோன்றித்தனமாக தலைவர் நியமிக்கப்பட்டால் யுத்தம் போன்றவை தோற்றம் பெறும். அமெரிக்க ஜனாதிபதி  கடந்த காலங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் வரிகளை அறிவித்துக்கொண்டு சென்றார். அமெரிக்க உயர் நீதிமன்றமும் அது தவறு என்று தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின்  தீர்ப்பையும் அவர் விமர்சித்தார். அவர் வெனிசுலாவுக்குள் புகுந்து  அந்த நாட்டுத் தலைவரை தூக்கிச் சென்றார்.தற்போது ஈரானுக்கு தாக்குதல் நடத்துகின்றார். இவ்வாறான தான்தோன்றித்தனமான தலைவர்களால் அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளது. உலகில் எம்மைப் போன்ற அபிவிருத்தியடையாத வறுமை நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பு கூற வேண்டும். யுத்தத்தில் சீனா இணையலாம், ரஷ்யாவும் இணையலாம். இதனால் எம்மைப் போன்ற நாடுகளுக்கே பாதிப்புகள் ஏற்படும். முன்னாள்  இராணுவ  அதிகாரியான சலே கைது செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கூறுவதாயின் பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகின்றது. அவரிடம் பெற்ற தகவல்கள் என்ன என்று இதுவரையில் பாதுகாப்பு அமைச்சசரோ அல்லது பொலிஸாரோ கூறவில்லை. இப்போது சலே கைது செய்யப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது  குற்றப்புலனாய்வுப் பிரிவின்  பிரதானி ரவி செனவிரட்ன, சானி அபேசேகர, கிழக்கு கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர ஆகியோரும்  பதவி வகித்துள்ளனர். இவர்கள் கடந்த தேர்தல் காலத்தில்  தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடையில் ஏறியதால் தற்போது உயர் பதவிகளில் உள்ளார்கள். அன்று  சலேவும்  அரசியல் மேடை ஏறியிருந்தால்  இன்று அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்திருப்பார்.கிழக்கில் தொப்பிகலவில் யுத்தம் இடம்பெற்றபோது சலேவே யுத்தத்தை இரண்டாக பிளவுபடுத்தினார். கருணாவை கிழக்கிற்கும், வடக்கிற்கு பொட்டுஅம்மான் என்றும் பிரித்தார். இவரே அதனை செய்தார். யுத்த காலத்தில் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாமல் புலனாய்வு பிரிவில் பணியாற்ற முடியாது. முஸ்லிம்களே புலனாய்வு பிரிவில் பணியாற்றினர். கத்தோலிக்க சபையின் சிறீல் காமினி ஆயர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி சலேவின் பிரச்சினை தொடர்பில்  அரசியல்வாதிகள்  கதைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடுவதற்கு சிறில் காமினி ஆயருக்கு உரிமை கிடையாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சிறில் காமினியை விடவும் எமக்கு பெறுமதியானவர்களே என்றார்.

Advertisement

Advertisement

Advertisement