• Nov 24 2025

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

Aathira / Nov 23rd 2025, 11:49 am
image

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை படி, தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தெதுரு ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்மட்டம் வெள்ளம் ஏற்படக்கூடிய மட்டத்தை நெருங்கியுள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, வெளியேற்றும் அளவு அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். 

இதன் காரணமாக தெதுரு ஓயாவை அண்மித்துள்ள வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேய்கனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். 

திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகலு, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல், கட்டான மற்றும் வத்தளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள தாழ்நிலங்கள் ஊடாக செல்லும் வீதிகள் சில இடங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கை படி, தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தெதுரு ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்மட்டம் வெள்ளம் ஏற்படக்கூடிய மட்டத்தை நெருங்கியுள்ளது.தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, வெளியேற்றும் அளவு அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். இதன் காரணமாக தெதுரு ஓயாவை அண்மித்துள்ள வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேய்கனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகலு, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல், கட்டான மற்றும் வத்தளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் உள்ள தாழ்நிலங்கள் ஊடாக செல்லும் வீதிகள் சில இடங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement