சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியதாவது,
தொடரும் மழைகளால் பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கி, சில இடங்களில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டு வந்துள்ளது.
இதில் கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரிஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் அதிகப்படியான அணர்த்த அபாயம் நிலவுகின்றதால் பொதுமக்களும் பயணிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை அனர்த்தங்களினால் 9 பேர் பலி சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியதாவது, தொடரும் மழைகளால் பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கி, சில இடங்களில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டு வந்துள்ளது.இதில் கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரிஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன.மேற்கண்ட பகுதிகளில் அதிகப்படியான அணர்த்த அபாயம் நிலவுகின்றதால் பொதுமக்களும் பயணிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.