இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கனத்த மழையுடனான காலநிலையால் இன்று பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழையால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தததையடுத்து தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கனத்த மழையுடனான காலநிலையால் இன்று பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மழையால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தததையடுத்து தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.