• Nov 22 2025

கடுகண்ணாவ அனர்த்தம் - இடிபாடுகளுக்குள் பெண் ஒருவர் உயிருடன் மீட்பு

Chithra / Nov 22nd 2025, 3:46 pm
image


கடுகன்னாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன.

சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடுகண்ணாவ அனர்த்தம் - இடிபாடுகளுக்குள் பெண் ஒருவர் உயிருடன் மீட்பு கடுகன்னாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன.சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement