• Mar 15 2026

மூதூர் மத்திய கல்லூரியில் இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடம்!

shanu / Dec 26th 2025, 2:13 pm
image

திருகோணமலை - மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடமொன்று நேற்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது.


குறித்த பாடசாலையில் காணப்படும் கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடமாக காணப்படுகிறது. 


புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.


அதேவேளை பழைய கட்டிடங்கள் ஆபத்து மிக்கதாக இருப்பதாக தெரிவித்து சில மாதங்களுக்கு முன்னதாக மக்கள் பேரணி நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் .


கடந்த வெள்ள அனர்த்தத்தினாலும், புயலாலும்  மூதூர் மத்திய கல்லூரி பாதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அங்கிருந்த வகுப்பறைக் கட்டிடமொன்று உடைந்து சேதமாகியுள்ளது.


மாணவர்கள் இல்லாத வேளையில் கட்டிடம் உடைவடைந்துள்ளது. மாணவர்கள் இருந்திருந்தால் பெரும் ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


எனவே மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மூதூர் மத்திய கல்லூரிக்கு புதிய கட்டிடம் ஒன்று அமைத்து தருமாறு பெற்றோர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதூர் மத்திய கல்லூரியில் இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடம் திருகோணமலை - மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடமொன்று நேற்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது.குறித்த பாடசாலையில் காணப்படும் கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடமாக காணப்படுகிறது. புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.அதேவேளை பழைய கட்டிடங்கள் ஆபத்து மிக்கதாக இருப்பதாக தெரிவித்து சில மாதங்களுக்கு முன்னதாக மக்கள் பேரணி நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் .கடந்த வெள்ள அனர்த்தத்தினாலும், புயலாலும்  மூதூர் மத்திய கல்லூரி பாதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அங்கிருந்த வகுப்பறைக் கட்டிடமொன்று உடைந்து சேதமாகியுள்ளது.மாணவர்கள் இல்லாத வேளையில் கட்டிடம் உடைவடைந்துள்ளது. மாணவர்கள் இருந்திருந்தால் பெரும் ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மூதூர் மத்திய கல்லூரிக்கு புதிய கட்டிடம் ஒன்று அமைத்து தருமாறு பெற்றோர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement