அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரின் வர்த்தக நிலையம் தோட்ட அதிகாரி ஒருவரால் உடைத்தெறியப்பட்ட நிலையில் அதற்கு நீதி பெற்று தருமாறு குறித்த வியாபாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நான் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அட்டன் - கொழும்பு பிரதான வீதியின் 60/12 மதகு ஓரமாக 'ஸ்ரீ கோமாதா'என்ற பெயரில் பசும்பால் விற்பனை நிலையமொன்றை நபரொருவர் நடத்தி வந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தை மேம்படுத்த ஆரம்பித்தபோது அன்றைய தினமே தோட்ட உதவி முகாமையாளர் அவ்விடத்திற்கு வருகை தந்து குறித்த இடம் தோட்ட முகாமைத்துவத்திற்கு சொந்தமானது எனக்கூறி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அம்முறைப்பாட்டுக்கான விசாரணை 13.09.2022ஆந் திகதி மேற்கொள்ளப்பட்டபோது,அவ்விடத்திற்கு அருகாமையிலேயே பிரிதொரு இடம் தருவதாக தோட்ட உதவி முகாமையாளர் கூறியதால் குறித்த நபரும் அவ்விடத்திலிருந்து கடையை அப்புறப்படுத்திக்கொள்ள இணக்கம் தெரிவித்தார்.
எனினும் அவர்கள் கூறியதுபோல எந்தவொரு இடத்தையும் வழங்காமையால் 27.09.2022 ஆந் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கருணை மனு ஒன்றினை அனுப்பியிருந்தார்.
இதற்கான பதிலை சனாதிபதி அலுவலகத்தில் இருந்து 'குறித்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வொன்றினை வழங்குமாறு அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரிடமிருந்து அவ்விடத்தில் தொடர்ந்தும் வியாபாரம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அத்தோடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து 12.04.2023 திகதி 'எனக்கு நிரந்த தீர்வொன்றினை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்ட கடிதம் தோட்ட முகாமையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த வியாபாரி தெரிவிக்கையில்
எமது வட்டவளை பிரதேசமானது வருடம் முழுவதும் மழைபெறும் பிரதேசம் என்பதால் நுகர்வோர் எனது பசும்பாலை அருந்தும் சந்தர்ப்பங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் நுகர்வோர் அமர்ந்து பசும்பால் அருந்துவதற்கும் கொள்வனவு செய்வதற்குமாக மூங்கிலிலான தற்காலிக கூடாரமொன்றை பசும்பால் விற்பனை நிலையத்தை ஒட்டியதாக அமைத்தேன்.
எனினும் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் (நோர்வூட் காரியாலயம்) இது தங்களின் எல்லைக்குட்பட்ட பிரதேசம் எனக்கூறி எனக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நான் அவ்விடத்தில் இல்லாதபோது 19.04.2023 அன்று உடைத்தெறிந்தனர்.
இக்காலப்பகுதியில் வட்டவளை தோட்ட அதிகாரி பொலிஸ் நிலையத்தில் என்மீது முறைப்பாடு ஒன்றினை செய்திருந்ததோடு, நான் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மீது முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தேன். எனினும், வட்டவளை பொலிஸ் நிலையத்தால் தோட்ட முகாமைத்துவத்தால் என்மீதான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதற்கான விசாரணைக்காக எனக்கு வாய்மொழிமூல அழைப்பு விடுக்கப்பட்டது. நான் இவ்விசாரணைக்காக இரண்டு தடவைகள் சென்றும்கூட தோட்ட முகாமைத்துவம் சமூகமளிக்காததன் காரணமாக அதற்கான விசாரணை நடைபெறவில்லை என்பதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு எதிராக நான் செய்த முறைப்பாட்டுக்கான விசாரணை இன்று வரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன் .
இதுகுறித்து 20.04.2023 அன்று நான் பிரதேச செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினை ஏற்று பிரதேச செயலாளரின் ஊடாக 16.05.2023 ஆந் திகதியிடப்பட்ட கடிதம் 'இந்த இடம் எனக்கு பொருத்தமற்றதாயின் பிரிதொரு இடம் எனக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் 'என்ற பணிப்புரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் 04.05.2023 அன்று எனது பசும்பால் விற்பனை நிலையத்திற்கு முன்னால் தோட்ட அதிகாரி கற்களைக் குவித்திருந்தார். இது குறித்து 09.05.2023 அன்று முன்னால் சனாதிபதிக்கு நான் அனுப்பிய கடிதத்தினை ஏற்று சனாதிபதி செயலகத்தில் ஊடாக 19.05.2023 திகதியிடப்பட்ட கடிதம் 'எனக்கொரு நிரந்தர தீர்வை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போது நான் மிகுந்த சிரமத்துடனேயே எனது வியாபாரத்தை மேற்கொண்டு வந்தேன். அதன்பின்னர், 01.08.2023 அன்று அக்கற்களை அகற்றி அவ்விடத்தை புனரமைத்து சற்று சீராக்க முயற்சிகளை மேற்கொண்டபோது 02.08.2023ஆந் திகதி கரோலினா தோட்ட முகாமையாளர். உதவி முகாமையாளர், கணக்குப்பிள்ளை, தோட்ட காவலாளி ஆகியோர் ஒன்றிணைந்து எனது வியாபார நிலையத்தை உடைத்தெறிந்தனர். இது குறித்தும் நான் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளேன்.
பின்னர் இது குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் இதற்கடுத்த நாளான 03.08.2023 அன்று அவ்விடத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட அதிகாரியிடம் வினவியதோடு சட்ட ரீதியில் நான் வியாபாரத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளை செய்துகொடுக்குமாறு கூறிச்சென்றார். இதன்போது அட்டன் அவர் பிளான்டேசன் உயரதிகாரியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதோடு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள வாய்மொழி உறுதிமொழிகளை அவ்வுயரதிகாரி வழங்கினார்.
உடைக்கப்பட்ட வியாபார நிலையத்தை அப்படியே மீளமைத்துக் கொடுப்பது
சேதத்திற்கான நட்ட ஈட்டை வழங்குவது
வியாபார நிலையத்திற்கு அருகாமையில் கூடாரமொன்றை அமைத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவது
அவ்விடத்தில் நான் சுதந்திரமாக வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான சட்ட ரீதியான வழிவகையினை ஏற்படுத்திக் கொடுப்பது
இவையனைத்தையும் வருகின்ற பத்து நாட்களுக்குள் (உடைக்கப்பட்ட நாளில் இருந்து) நிறைவேற்றித் தருவதாக அமைச்சரிடம் உறுதியளித்ததோடு அதனை அமைச்சர் எனக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் தெரிவித்தார்.
இதன்பின்னர், இதுதொடர்பான பேச்சுவார்த்தை 09.08.2023 அன்று ஸ்ரெதன் பயிற்சி நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கம்பனியின் நிருவாக உயரதிகாரிகள், தோட்ட அதிகாரி, பாதிக்கப்பட்ட நான் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது. இதில் அவ்விடத்தில் நான் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான எனது திட்டம் குறித்து தோட்ட அதிகாரியிடம் கடிதம் வழங்குமாறும், அதன்பின்னர் இதுபோன்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தி எனது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகின்றோம் என்ற உறுதிமொழியோடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்தனர்.
இதற்கிணங்க நான் 11.08.2023ஆந் திகதி தோட்ட அதிகாரிக்கு எனது கோரிக்கை கடிதத்ததையும் வழங்கினேன். ஆனால், அவர்கள் குறிப்பிட்டதுபோல இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் எதனையும் நடத்தாமல் அவ்விடத்தில் மதகின் ஓரமாக பின்புறம் இடிந்துபோயுள்ள பகுதியில் வியாபாரக் கடையினை வெறுமனே தூக்கி நிறுத்திவைத்து அதனையொட்டி முற்கம்பி வேலி ஒன்றை குறுக்கே அமைத்து என்னை ஒரு சிறுபகுதிக்குள் ஒடுக்கி வைத்தனர். அது மதகையொட்டிய பகுதி என்பதால் அதனை நான் ஏற்காமல் முற்கம்பி வேலிக்கு மறுபுறத்தில் உள்ள எனது பழைய இடத்திற்கு கடையை நகர்த்தி எனது வியாபாரத்தை மீளத் தொடங்கினேன்.
ஆனால் அதன் பின்னரும் தோட்ட முகாமைத்துவம் என்மீது வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து அதற்கன விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர், தொடர்ச்சியாக அவ்விடத்தில் நான் வியாபாரத்ததை மேற்கொண்டுவந்த வேளையில் 04.09.2023 அன்று எனது கடை இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டது.
இதுகுறித்து நான் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இதற்காக சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் காற்றின் மூலமாக கீழே விழுந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் விசாரணையை முடித்துள்ளனர். அதன் பின்னர், நான் கடையை மீண்டும் புனரமைத்து அன்றிலிருந்து கடந்த 15 மாதங்களாக அதே கடையில் வியாபாரத்தை மேற்கொண்டு எனது மனைவி, எனது பிள்ளை மற்றும் தாயையும் பராமரித்து வந்தேன் .
இதனிடையே இங்குள்ள பலர் எனது வியாபார நிலையத்தினை அண்டியும், அருகிலுள்ள மதகின் நீரோடையிலும் அதிகளவான குப்பைகளை கொட்டியதன் காரணமாக சூழல் மாசு ஏற்பட்டதால் சுகாதார பரிசோதகர்கள் அவற்றை சுத்தப்படுத்தி வைக்குமாறு எனக்கு வழங்கிய வாய்மொழி மூலமான பணிப்புரையின் பேரில் நான் அவ்விடத்தை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வைத்திருக்கின்றேன். குப்பை தொடர்பான பிரச்சினை தொடர்பிலும் நான் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வியாபார நிலையம் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளிலும் தொடர்புடைய தோட்ட உதவி முகாமையாளர் கடந்த ஆறு (06) மாதங்களுக்கு முன்னர் பணியிடமாற்றம் பெற்றுச் சென்று அப்பதவிக்கு தற்போது பிரிதொருவரே நியமனம் பெற்று வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதே இடத்தில் எனது கடை இருக்கிறது என்பதோடு அதிலேயே நான் வியாபாரத்தையும் மேற்கொண்டு வந்தேன்.
கடந்த 09.12.2024 அன்று புதிய உதவி முகாமையாளர் மீண்டும் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் நான் பலவந்தமாக இடத்தை ஆக்கிரமித்துவருவதாகவும், கடையை உடனடியாக அகற்றிக்கொள்ளுமாறும் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கான விசாரணை 14.12.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த உதவி முகாமையாளர் 15 மாதங்கள் கழித்து பொலிஸ் முறைப்பாடு செய்தமைக்கான காரணம் என்ன? என்னை பழிவாங்கும் நோக்கிலா இதனை மேற்கொள்கின்றனர்? என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுவதற்கான நியாயமாக காரணங்கள் உள்ளன.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் எனது கடையில் இருந்து 1.75 கிலோமீற்றர்கள் தொலைவில் வட்டவளை புகையிரத நிலையத்திற்குச் செல்லும் சந்தியில் இருமருங்கிலும் ஹோட்டல் மற்றும் சுபானா போன்றன அமைக்கப்பட்டுள்ளன.
எனது கடையில் இருந்து கொழும்பு வீதியில் கிலோமீற்றர்கள் தொலைவில் இற்கு மேற்பட்ட கடைகள் வீதிக்கு மிக அருகாமையில் அமைக்கப்பட்டுள்ன
இவையனைத்தும் அட்டன் பெருந்தோட்டக் கம்பனிக்கு உரித்தான தோட்டத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. என்னும் எனக்கு மட்டும் இதில் பாகுபாடு காட்டப்படுவதன் மூலம் நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை (தமிழர்) சேர்ந்தவன் என்பதால் எனக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக நான் உணர்கின்றேன்.
ஏனெனில் மேலே குறிப்பிட்ட அனைத்து கடைகளும் பெரும்பான்மை சமூகத்தை (சிங்களவர்) சார்ந்தது என்பதாலேயே எனக்கு அநீதி இழைக்கப்படுவதாக எண்ணுகின்றேன்.
நான் கடந்த 2022ஆம் வருடம் முதல் அம்பகமுவ பிரதேச சபைக்கு வரிப்பணம் செலுத்தி வியாபாரம் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளேன் 2024ஆம் ஆண்டு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் வியாபார பெயர் பதிவுச் சான்றிதழையும் பெற்று சட்ட ரீதியாகவே இந்த வியாபார நிலையத்தை நடத்தி வருகின்றேன். இந்த தோட்ட நிருவாகம் எனக்கு கொடுக்கின்ற கெடுபிடிகளால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என் மனநிலை பாதிப்படைந்துள்ளது.
என் குடும்பத்தில் நான், எனது மனைவி, மகள் மற்றும் தாய் ஆகிய நால்வரும் இந்த வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றோம். இந்த வியாபாரத்தை செய்ய முடியாமல் போனால் நாங்கள் நால்வரும் தற்கொலை செய்தகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை இது குறித்து நான் ஏற்கனவே முன்னாள் சனாதிபதி உட்பட பலருக்கும் அறிவித்தபோது அவர்களின் ஊடாக 'எனக்கொரு நிரந்தர தீர்வினை வழங்குமாறு' கடிதம்மூலம் பணிப்புரை வழங்கியும் கூட இதுவரையிலும் எனக்கொரு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
இதன்மூலம் அரசாங்க உத்தியோகத்தர்கள் குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் எனது வாழ்வரிமைக்கான அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். இவர்கள் பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு சார்பாகவே தமது நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்துவருவதோடு ஒரே வீதியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சட்டத்தை அமுல்படுத்துகின்றனர். இது எனக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.
இதன் காரணமாகவே நான் கடந்த 16.12.2024 அன்று எனது உயிர்வாழும் உரிமையைக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தேன். இதன்போது எமது களத்திற்கு வருகை தந்த அரசாங்க தரப்பான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர் எனது பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் உறுதியளித்தமையால் நான் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் அதற்கு இணங்கி உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்.
அதன் பின்னர் 19.12.2024 அன்று நீதிமன்றுக்கு செல்வதற்கான அழைப்பாணையையும் அதனோடு தோட்ட முகாமைத்துவம் ஏற்கனவே என்மீது சிவில் வழக்கொன்றினை பதிவுசெய்திருந்த நகல் பிரதிகளும் வழங்கப்பட்டன.
இதனால் 20.12.2024 அன்று நீதிமன்றில் நான் ஆஜராகியபோது அவர்கள் ஏற்கனவே எனது வாழ்வாதரத்திற்காக நடத்திவரும் வியாபாரத்தை நடத்தக்கூடாது என்ற தடையுத்தரவினையும் பெற்றிருந்ததோடு அதனை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த தடையுத்தரவானது நாளை(31) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இன்றளவிலும் எனக்கு தெளிவில்லாமல் உள்ளதோடு அது முழுமையாக சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது. இது எனது மொழியுரிமையை மீறும் ஒன்றாகவும் உள்ளது.
எனவே எனது பிரச்சினை தொடர்பில் நிலையான தீர்வினை பெற்றுத்தருமாறு குறித்த வர்த்தகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தோட்ட அதிகாரி ஒருவரால் உடைத்தெறியப்பட்ட வர்த்தக நிலையம்; விடுக்கப்பட்ட கோரிக்கை. அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரின் வர்த்தக நிலையம் தோட்ட அதிகாரி ஒருவரால் உடைத்தெறியப்பட்ட நிலையில் அதற்கு நீதி பெற்று தருமாறு குறித்த வியாபாரி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நான் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அட்டன் - கொழும்பு பிரதான வீதியின் 60/12 மதகு ஓரமாக 'ஸ்ரீ கோமாதா'என்ற பெயரில் பசும்பால் விற்பனை நிலையமொன்றை நபரொருவர் நடத்தி வந்திருந்தார்.இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தை மேம்படுத்த ஆரம்பித்தபோது அன்றைய தினமே தோட்ட உதவி முகாமையாளர் அவ்விடத்திற்கு வருகை தந்து குறித்த இடம் தோட்ட முகாமைத்துவத்திற்கு சொந்தமானது எனக்கூறி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அம்முறைப்பாட்டுக்கான விசாரணை 13.09.2022ஆந் திகதி மேற்கொள்ளப்பட்டபோது,அவ்விடத்திற்கு அருகாமையிலேயே பிரிதொரு இடம் தருவதாக தோட்ட உதவி முகாமையாளர் கூறியதால் குறித்த நபரும் அவ்விடத்திலிருந்து கடையை அப்புறப்படுத்திக்கொள்ள இணக்கம் தெரிவித்தார்.எனினும் அவர்கள் கூறியதுபோல எந்தவொரு இடத்தையும் வழங்காமையால் 27.09.2022 ஆந் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கருணை மனு ஒன்றினை அனுப்பியிருந்தார்.இதற்கான பதிலை சனாதிபதி அலுவலகத்தில் இருந்து 'குறித்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வொன்றினை வழங்குமாறு அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரிடமிருந்து அவ்விடத்தில் தொடர்ந்தும் வியாபாரம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அத்தோடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து 12.04.2023 திகதி 'எனக்கு நிரந்த தீர்வொன்றினை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்ட கடிதம் தோட்ட முகாமையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பில் குறித்த வியாபாரி தெரிவிக்கையில்எமது வட்டவளை பிரதேசமானது வருடம் முழுவதும் மழைபெறும் பிரதேசம் என்பதால் நுகர்வோர் எனது பசும்பாலை அருந்தும் சந்தர்ப்பங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனால் மழைக்காலங்களில் நுகர்வோர் அமர்ந்து பசும்பால் அருந்துவதற்கும் கொள்வனவு செய்வதற்குமாக மூங்கிலிலான தற்காலிக கூடாரமொன்றை பசும்பால் விற்பனை நிலையத்தை ஒட்டியதாக அமைத்தேன். எனினும் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் (நோர்வூட் காரியாலயம்) இது தங்களின் எல்லைக்குட்பட்ட பிரதேசம் எனக்கூறி எனக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நான் அவ்விடத்தில் இல்லாதபோது 19.04.2023 அன்று உடைத்தெறிந்தனர். இக்காலப்பகுதியில் வட்டவளை தோட்ட அதிகாரி பொலிஸ் நிலையத்தில் என்மீது முறைப்பாடு ஒன்றினை செய்திருந்ததோடு, நான் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மீது முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தேன். எனினும், வட்டவளை பொலிஸ் நிலையத்தால் தோட்ட முகாமைத்துவத்தால் என்மீதான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது. அதற்கான விசாரணைக்காக எனக்கு வாய்மொழிமூல அழைப்பு விடுக்கப்பட்டது. நான் இவ்விசாரணைக்காக இரண்டு தடவைகள் சென்றும்கூட தோட்ட முகாமைத்துவம் சமூகமளிக்காததன் காரணமாக அதற்கான விசாரணை நடைபெறவில்லை என்பதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு எதிராக நான் செய்த முறைப்பாட்டுக்கான விசாரணை இன்று வரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன் .இதுகுறித்து 20.04.2023 அன்று நான் பிரதேச செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினை ஏற்று பிரதேச செயலாளரின் ஊடாக 16.05.2023 ஆந் திகதியிடப்பட்ட கடிதம் 'இந்த இடம் எனக்கு பொருத்தமற்றதாயின் பிரிதொரு இடம் எனக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் 'என்ற பணிப்புரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் 04.05.2023 அன்று எனது பசும்பால் விற்பனை நிலையத்திற்கு முன்னால் தோட்ட அதிகாரி கற்களைக் குவித்திருந்தார். இது குறித்து 09.05.2023 அன்று முன்னால் சனாதிபதிக்கு நான் அனுப்பிய கடிதத்தினை ஏற்று சனாதிபதி செயலகத்தில் ஊடாக 19.05.2023 திகதியிடப்பட்ட கடிதம் 'எனக்கொரு நிரந்தர தீர்வை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.இதன்போது நான் மிகுந்த சிரமத்துடனேயே எனது வியாபாரத்தை மேற்கொண்டு வந்தேன். அதன்பின்னர், 01.08.2023 அன்று அக்கற்களை அகற்றி அவ்விடத்தை புனரமைத்து சற்று சீராக்க முயற்சிகளை மேற்கொண்டபோது 02.08.2023ஆந் திகதி கரோலினா தோட்ட முகாமையாளர். உதவி முகாமையாளர், கணக்குப்பிள்ளை, தோட்ட காவலாளி ஆகியோர் ஒன்றிணைந்து எனது வியாபார நிலையத்தை உடைத்தெறிந்தனர். இது குறித்தும் நான் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளேன். பின்னர் இது குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் இதற்கடுத்த நாளான 03.08.2023 அன்று அவ்விடத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட அதிகாரியிடம் வினவியதோடு சட்ட ரீதியில் நான் வியாபாரத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளை செய்துகொடுக்குமாறு கூறிச்சென்றார். இதன்போது அட்டன் அவர் பிளான்டேசன் உயரதிகாரியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதோடு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள வாய்மொழி உறுதிமொழிகளை அவ்வுயரதிகாரி வழங்கினார்.உடைக்கப்பட்ட வியாபார நிலையத்தை அப்படியே மீளமைத்துக் கொடுப்பதுசேதத்திற்கான நட்ட ஈட்டை வழங்குவதுவியாபார நிலையத்திற்கு அருகாமையில் கூடாரமொன்றை அமைத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதுஅவ்விடத்தில் நான் சுதந்திரமாக வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான சட்ட ரீதியான வழிவகையினை ஏற்படுத்திக் கொடுப்பதுஇவையனைத்தையும் வருகின்ற பத்து நாட்களுக்குள் (உடைக்கப்பட்ட நாளில் இருந்து) நிறைவேற்றித் தருவதாக அமைச்சரிடம் உறுதியளித்ததோடு அதனை அமைச்சர் எனக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் தெரிவித்தார்.இதன்பின்னர், இதுதொடர்பான பேச்சுவார்த்தை 09.08.2023 அன்று ஸ்ரெதன் பயிற்சி நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கம்பனியின் நிருவாக உயரதிகாரிகள், தோட்ட அதிகாரி, பாதிக்கப்பட்ட நான் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது. இதில் அவ்விடத்தில் நான் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான எனது திட்டம் குறித்து தோட்ட அதிகாரியிடம் கடிதம் வழங்குமாறும், அதன்பின்னர் இதுபோன்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தி எனது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகின்றோம் என்ற உறுதிமொழியோடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்தனர். இதற்கிணங்க நான் 11.08.2023ஆந் திகதி தோட்ட அதிகாரிக்கு எனது கோரிக்கை கடிதத்ததையும் வழங்கினேன். ஆனால், அவர்கள் குறிப்பிட்டதுபோல இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் எதனையும் நடத்தாமல் அவ்விடத்தில் மதகின் ஓரமாக பின்புறம் இடிந்துபோயுள்ள பகுதியில் வியாபாரக் கடையினை வெறுமனே தூக்கி நிறுத்திவைத்து அதனையொட்டி முற்கம்பி வேலி ஒன்றை குறுக்கே அமைத்து என்னை ஒரு சிறுபகுதிக்குள் ஒடுக்கி வைத்தனர். அது மதகையொட்டிய பகுதி என்பதால் அதனை நான் ஏற்காமல் முற்கம்பி வேலிக்கு மறுபுறத்தில் உள்ள எனது பழைய இடத்திற்கு கடையை நகர்த்தி எனது வியாபாரத்தை மீளத் தொடங்கினேன்.ஆனால் அதன் பின்னரும் தோட்ட முகாமைத்துவம் என்மீது வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து அதற்கன விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர், தொடர்ச்சியாக அவ்விடத்தில் நான் வியாபாரத்ததை மேற்கொண்டுவந்த வேளையில் 04.09.2023 அன்று எனது கடை இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நான் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இதற்காக சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் காற்றின் மூலமாக கீழே விழுந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் விசாரணையை முடித்துள்ளனர். அதன் பின்னர், நான் கடையை மீண்டும் புனரமைத்து அன்றிலிருந்து கடந்த 15 மாதங்களாக அதே கடையில் வியாபாரத்தை மேற்கொண்டு எனது மனைவி, எனது பிள்ளை மற்றும் தாயையும் பராமரித்து வந்தேன் . இதனிடையே இங்குள்ள பலர் எனது வியாபார நிலையத்தினை அண்டியும், அருகிலுள்ள மதகின் நீரோடையிலும் அதிகளவான குப்பைகளை கொட்டியதன் காரணமாக சூழல் மாசு ஏற்பட்டதால் சுகாதார பரிசோதகர்கள் அவற்றை சுத்தப்படுத்தி வைக்குமாறு எனக்கு வழங்கிய வாய்மொழி மூலமான பணிப்புரையின் பேரில் நான் அவ்விடத்தை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வைத்திருக்கின்றேன். குப்பை தொடர்பான பிரச்சினை தொடர்பிலும் நான் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.இந்த வியாபார நிலையம் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளிலும் தொடர்புடைய தோட்ட உதவி முகாமையாளர் கடந்த ஆறு (06) மாதங்களுக்கு முன்னர் பணியிடமாற்றம் பெற்றுச் சென்று அப்பதவிக்கு தற்போது பிரிதொருவரே நியமனம் பெற்று வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதே இடத்தில் எனது கடை இருக்கிறது என்பதோடு அதிலேயே நான் வியாபாரத்தையும் மேற்கொண்டு வந்தேன்.கடந்த 09.12.2024 அன்று புதிய உதவி முகாமையாளர் மீண்டும் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் நான் பலவந்தமாக இடத்தை ஆக்கிரமித்துவருவதாகவும், கடையை உடனடியாக அகற்றிக்கொள்ளுமாறும் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கான விசாரணை 14.12.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.இந்த உதவி முகாமையாளர் 15 மாதங்கள் கழித்து பொலிஸ் முறைப்பாடு செய்தமைக்கான காரணம் என்ன என்னை பழிவாங்கும் நோக்கிலா இதனை மேற்கொள்கின்றனர் என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுவதற்கான நியாயமாக காரணங்கள் உள்ளன. ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் எனது கடையில் இருந்து 1.75 கிலோமீற்றர்கள் தொலைவில் வட்டவளை புகையிரத நிலையத்திற்குச் செல்லும் சந்தியில் இருமருங்கிலும் ஹோட்டல் மற்றும் சுபானா போன்றன அமைக்கப்பட்டுள்ளன.எனது கடையில் இருந்து கொழும்பு வீதியில் கிலோமீற்றர்கள் தொலைவில் இற்கு மேற்பட்ட கடைகள் வீதிக்கு மிக அருகாமையில் அமைக்கப்பட்டுள்னஇவையனைத்தும் அட்டன் பெருந்தோட்டக் கம்பனிக்கு உரித்தான தோட்டத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. என்னும் எனக்கு மட்டும் இதில் பாகுபாடு காட்டப்படுவதன் மூலம் நான் ஒரு சிறுபான்மை சமூகத்தை (தமிழர்) சேர்ந்தவன் என்பதால் எனக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக நான் உணர்கின்றேன். ஏனெனில் மேலே குறிப்பிட்ட அனைத்து கடைகளும் பெரும்பான்மை சமூகத்தை (சிங்களவர்) சார்ந்தது என்பதாலேயே எனக்கு அநீதி இழைக்கப்படுவதாக எண்ணுகின்றேன்.நான் கடந்த 2022ஆம் வருடம் முதல் அம்பகமுவ பிரதேச சபைக்கு வரிப்பணம் செலுத்தி வியாபாரம் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளேன் 2024ஆம் ஆண்டு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் வியாபார பெயர் பதிவுச் சான்றிதழையும் பெற்று சட்ட ரீதியாகவே இந்த வியாபார நிலையத்தை நடத்தி வருகின்றேன். இந்த தோட்ட நிருவாகம் எனக்கு கொடுக்கின்ற கெடுபிடிகளால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என் மனநிலை பாதிப்படைந்துள்ளது. என் குடும்பத்தில் நான், எனது மனைவி, மகள் மற்றும் தாய் ஆகிய நால்வரும் இந்த வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றோம். இந்த வியாபாரத்தை செய்ய முடியாமல் போனால் நாங்கள் நால்வரும் தற்கொலை செய்தகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை இது குறித்து நான் ஏற்கனவே முன்னாள் சனாதிபதி உட்பட பலருக்கும் அறிவித்தபோது அவர்களின் ஊடாக 'எனக்கொரு நிரந்தர தீர்வினை வழங்குமாறு' கடிதம்மூலம் பணிப்புரை வழங்கியும் கூட இதுவரையிலும் எனக்கொரு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறவில்லை.இதன்மூலம் அரசாங்க உத்தியோகத்தர்கள் குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் எனது வாழ்வரிமைக்கான அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். இவர்கள் பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு சார்பாகவே தமது நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்துவருவதோடு ஒரே வீதியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சட்டத்தை அமுல்படுத்துகின்றனர். இது எனக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.இதன் காரணமாகவே நான் கடந்த 16.12.2024 அன்று எனது உயிர்வாழும் உரிமையைக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தேன். இதன்போது எமது களத்திற்கு வருகை தந்த அரசாங்க தரப்பான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர் எனது பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் உறுதியளித்தமையால் நான் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் அதற்கு இணங்கி உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன். அதன் பின்னர் 19.12.2024 அன்று நீதிமன்றுக்கு செல்வதற்கான அழைப்பாணையையும் அதனோடு தோட்ட முகாமைத்துவம் ஏற்கனவே என்மீது சிவில் வழக்கொன்றினை பதிவுசெய்திருந்த நகல் பிரதிகளும் வழங்கப்பட்டன. இதனால் 20.12.2024 அன்று நீதிமன்றில் நான் ஆஜராகியபோது அவர்கள் ஏற்கனவே எனது வாழ்வாதரத்திற்காக நடத்திவரும் வியாபாரத்தை நடத்தக்கூடாது என்ற தடையுத்தரவினையும் பெற்றிருந்ததோடு அதனை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.குறித்த தடையுத்தரவானது நாளை(31) வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இன்றளவிலும் எனக்கு தெளிவில்லாமல் உள்ளதோடு அது முழுமையாக சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது. இது எனது மொழியுரிமையை மீறும் ஒன்றாகவும் உள்ளது.எனவே எனது பிரச்சினை தொடர்பில் நிலையான தீர்வினை பெற்றுத்தருமாறு குறித்த வர்த்தகர் கோரிக்கை விடுத்துள்ளார்.