சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று(5) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளது.
இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக 40 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கையிருப்புப் பட்டியலில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற ஊழியர்கள் சிலருக்கு அவர் முறையற்ற அழுத்தம் கொடுத்ததாக அஜித் பி. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
சபாநாயகருக்கு நெருக்கடி இன்று எடுக்கப்படும் முக்கிய முடிவு கூடும் எதிர்க்கட்சி குழு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று(5) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளது.இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக 40 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கையிருப்புப் பட்டியலில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற ஊழியர்கள் சிலருக்கு அவர் முறையற்ற அழுத்தம் கொடுத்ததாக அஜித் பி. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.