யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவரும், எழுத்தாளருமான கலாநிதி- தி. செல்வமனோகரன் எழுதிய ஈழத்து நாட்டார் தெய்வங்கள், வாழ்க்கை வழக்காறுகள், உதிர்ந்தொளிரும் சொற்கள் ஆகிய மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று புதன்கிழமை (18.11.2026) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிரேஷ்ட விரிவுரையாளரும், எழுத்தாளருமான இ. இராஜேஸ் கண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
மூத்த எழுத்தாளர் சோ. பத்மநாதன் அவர்கள் மங்கள விளக்கேற்றலை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து மூன்று நூல்களின் விமர்சன உரைகள் இடம்பெற்றன.
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் என்கிற நூல் தொடர்பிலான விமர்சன உரையினை எழுத்தாளர் ந. குகபரன் அவர்கள் வழங்கினார். இரண்டாவதாக வாழ்க்கை வழக்காறுகள் என்கிற நூலின் விமர்சன உரையினை எழுத்தாளர் இ.சு . முரளிதரன் அவர்கள் வழங்கினார். இறுதியாக உதிர்ந்தொளிரும் சொற்கள் என்கிற நூல் தொடர்பிலான விமர்சன உரையினை விரிவுரையாளர் அஜந்தகுமார் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நூலாசிரியர் கலாநிதி செல்வமனோகரன் அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது.
பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், ஊரவர்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம்பெற்றது.
குறித்த நேரத்துக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி குறித்த நேரத்துக்கு நிகழ்வுகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் செல்வமனோகரனின் மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவரும், எழுத்தாளருமான கலாநிதி- தி. செல்வமனோகரன் எழுதிய ஈழத்து நாட்டார் தெய்வங்கள், வாழ்க்கை வழக்காறுகள், உதிர்ந்தொளிரும் சொற்கள் ஆகிய மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று புதன்கிழமை (18.11.2026) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிரேஷ்ட விரிவுரையாளரும், எழுத்தாளருமான இ. இராஜேஸ் கண்ணன் தலைமையில் இடம்பெற்றது.மூத்த எழுத்தாளர் சோ. பத்மநாதன் அவர்கள் மங்கள விளக்கேற்றலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மூன்று நூல்களின் விமர்சன உரைகள் இடம்பெற்றன. ஈழத்து நாட்டார் தெய்வங்கள் என்கிற நூல் தொடர்பிலான விமர்சன உரையினை எழுத்தாளர் ந. குகபரன் அவர்கள் வழங்கினார். இரண்டாவதாக வாழ்க்கை வழக்காறுகள் என்கிற நூலின் விமர்சன உரையினை எழுத்தாளர் இ.சு . முரளிதரன் அவர்கள் வழங்கினார். இறுதியாக உதிர்ந்தொளிரும் சொற்கள் என்கிற நூல் தொடர்பிலான விமர்சன உரையினை விரிவுரையாளர் அஜந்தகுமார் அவர்கள் நிகழ்த்தினார்கள். இறுதியாக நூலாசிரியர் கலாநிதி செல்வமனோகரன் அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், ஊரவர்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம்பெற்றது. குறித்த நேரத்துக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி குறித்த நேரத்துக்கு நிகழ்வுகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.