• Nov 19 2026

8 மாதங்களாக முடங்கிய அபிவிருத்தி பணிகள்; மாற்று நாடுகளை நாடும் இலங்கை

Tar
Chithra / Nov 19th 2026, 11:25 am
image


நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாற்று நாடுகளிலிருந்து தார் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஈரானிலிருந்து தார் இறக்குமதி கடந்த மார்ச் மாதம் முதல் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் பிரதேச சபை வீதிகள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வரையிலான பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.


மாற்று நாடுகளிலிருந்து தார் மாதிரிகளைப் பெற்று, நாட்டின் காலநிலைக்கு ஏற்ற வகைகளைத் தெரிவுசெய்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 8 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, 'டித்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த ஏ மற்றும் பி தரத்திலான சுமார் 490 வீதிகள் இன்னும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மேலும், அனர்த்தத்தினால் சேதமடைந்த புகையிரதப் பாதைகளின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


8 மாதங்களாக முடங்கிய அபிவிருத்தி பணிகள்; மாற்று நாடுகளை நாடும் இலங்கை நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாற்று நாடுகளிலிருந்து தார் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஈரானிலிருந்து தார் இறக்குமதி கடந்த மார்ச் மாதம் முதல் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பிரதேச சபை வீதிகள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வரையிலான பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.மாற்று நாடுகளிலிருந்து தார் மாதிரிகளைப் பெற்று, நாட்டின் காலநிலைக்கு ஏற்ற வகைகளைத் தெரிவுசெய்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 8 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 'டித்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த ஏ மற்றும் பி தரத்திலான சுமார் 490 வீதிகள் இன்னும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மேலும், அனர்த்தத்தினால் சேதமடைந்த புகையிரதப் பாதைகளின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement