• Nov 19 2026

Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி!

Aathira / Nov 19th 2026, 7:35 am
image

Act Now திட்டத்தின் கீழ், மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் (DIRC) உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு நேற்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் புதிய மண்டபமான (Kacheri Mini Conference Hall) இல் நடைபெற்றது.

இப்பயிற்சி நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையேற்று நடத்தியதுடன், Act Now திட்டத்தின் கீழ் மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்களின் அறிவு, திறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, அனர்த்த இடர் முகாமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் பொறுப்புடன் செயற்படுதல் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் DIRC உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி Act Now திட்டத்தின் கீழ், மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் (DIRC) உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு நேற்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் புதிய மண்டபமான (Kacheri Mini Conference Hall) இல் நடைபெற்றது.இப்பயிற்சி நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையேற்று நடத்தியதுடன், Act Now திட்டத்தின் கீழ் மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்களின் அறிவு, திறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.இதன்போது, அனர்த்த இடர் முகாமைத்துவம், ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் பொறுப்புடன் செயற்படுதல் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் DIRC உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement