• Oct 03 2024

அரசின் சதி செயல்..! ஜனவரி முதல் எட்டு இலட்சம் பேரின் சமுர்த்தி வெட்டு!

Chithra / Jan 12th 2024, 9:17 am
image

Advertisement

 

அஸ்வசும வேலைத்திட்டத்தின் ஊடாக ஏறக்குறைய அரைவாசி மக்களின் சமுர்த்தி மானியம் குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.

இதன்படி, இதுவரை சமுர்த்தி உதவித்தொகையை பெற்றுக்கொண்ட எட்டு இலட்சம் பேர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதனை இழப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு கொடிய குற்றம். கஷ்டப்பட்டு வாழ முயலும் மக்களின் மானியத்தை வெட்டி யாருக்கு கொடுக்க முயல்கிறார்கள்.

எனவே இதை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அரசாங்கத்தில் உள்ளவர்களும் உதவி கேட்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் சமுர்த்தி வங்கிகள் 12 பில்லியன் இலாபத்தை ஈட்டியதாகவும், அவ்வாறான சேவைகளை வழங்கும் சமுர்த்தியை அரசாங்கம் புறக்கணித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசின் சதி செயல். ஜனவரி முதல் எட்டு இலட்சம் பேரின் சமுர்த்தி வெட்டு  அஸ்வசும வேலைத்திட்டத்தின் ஊடாக ஏறக்குறைய அரைவாசி மக்களின் சமுர்த்தி மானியம் குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.இதன்படி, இதுவரை சமுர்த்தி உதவித்தொகையை பெற்றுக்கொண்ட எட்டு இலட்சம் பேர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதனை இழப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இது ஒரு கொடிய குற்றம். கஷ்டப்பட்டு வாழ முயலும் மக்களின் மானியத்தை வெட்டி யாருக்கு கொடுக்க முயல்கிறார்கள்.எனவே இதை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அரசாங்கத்தில் உள்ளவர்களும் உதவி கேட்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.கடந்த வருடம் சமுர்த்தி வங்கிகள் 12 பில்லியன் இலாபத்தை ஈட்டியதாகவும், அவ்வாறான சேவைகளை வழங்கும் சமுர்த்தியை அரசாங்கம் புறக்கணித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement