அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 'தீர்வை வரிகளுக்கு' ஜூலை 9 ஆம் திகதிக்கு முன்னர் ஏதேனும் ஒரு வகையான சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டின் அடிப்படையில், அதிகரித்த வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இலங்கை சில நன்மைகளைப் பெற முடியும்.
வரி விகிதத்தைக் குறைக்க நிகழ்நிலை மூலம் இலங்கை அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
எம்மால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய 9ஆம் திகதி இந்த வரிக் கொள்கையில் எமக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு திருத்தங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.
இலங்கை சார்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பிரதிபலனாக எமக்கு சலுகை கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
தீர்வை வரிகளுக்கு ஜூலை 9ஆம் திகதிக்குள் சலுகை கிடைக்கும் - அமைச்சர் நளிந்த நம்பிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 'தீர்வை வரிகளுக்கு' ஜூலை 9 ஆம் திகதிக்கு முன்னர் ஏதேனும் ஒரு வகையான சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளதாவது,தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டின் அடிப்படையில், அதிகரித்த வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இலங்கை சில நன்மைகளைப் பெற முடியும்.வரி விகிதத்தைக் குறைக்க நிகழ்நிலை மூலம் இலங்கை அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எம்மால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய 9ஆம் திகதி இந்த வரிக் கொள்கையில் எமக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு திருத்தங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.இலங்கை சார்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பிரதிபலனாக எமக்கு சலுகை கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.