• Apr 27 2025

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு: யாழில் பல்கலை மாணவன் உயிரிழப்பு..!

Sharmi / Apr 26th 2025, 4:18 pm
image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம்(26)  தவறான  முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கொட்டகல - புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த 24வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கொக்குவில் பிரவுண் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார். 

அந்த மாணவன் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த மாணவனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று அதிகாலை மாணவன் தவறான முடிவெடுத்து  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு: யாழில் பல்கலை மாணவன் உயிரிழப்பு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம்(26)  தவறான  முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.கொட்டகல - புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த 24வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த மாணவன் கொக்குவில் பிரவுண் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார். அந்த மாணவன் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று அதிகாலை மாணவன் தவறான முடிவெடுத்து  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement