ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருகொட சந்தி பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.
ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,குருகொட போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொரணையில் திடீர் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது. ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருகொட சந்தி பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,குருகொட போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.