• Apr 26 2025

"மனம் தெளிவானால் யாராலும் வீழ்த்தப்படுவதில்லை" - துணிந்து செல் வெற்றி உன் கையில்....

Thansita / Apr 26th 2025, 3:09 pm
image

மனிதனது வாழ்க்கைப்பாதை  பலகோணங்களில் மாறுபடக்கூடியது. எப்படி மாறினாலும் அதற்கேற்ற மனிதர்களாக அதன் பின்னால் ஓட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

போராட்டங்களும் சகிப்புக்களும் ஏமாற்றங்களும் கவலைகளும் கண்ணீருமாக வாழ்க்கை வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது.  அந்தவகையில் 

யதார்த்த வாழ்க்கைக்கும் சிறுவயது முதல் எமக்குப் போசிக்கப்பட்டு வந்த அறவழி வாழ்வுக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?  "பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்று அடித்து வளர்க்கப்பட்ட காலம் மாறி இன்று  "உண்மையைச் சொல்லாதே உலகத்தில் வாழமாட்டாய்" என்று ஏன் தலைகீழாக மாற்றப்படுகிறார்கள்?

"எதிரிகளை நான் துவம்சம் செய்கின்றேன் ; அவர்களை நான் எனது நண்பர்களாக்கும் போது" என்று  கூறிய ஆபிரகாம் லிங்கனின் கூற்று இன்று எத்தனை பேரின் வாழ்வில் வெளிச்சத்தை ஈட்டியுள்ளது. எத்தனை பேர் இதனை கடைப்பிடிக்கிறார்கள்? இதனை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயன்று பாருங்கள்.   உங்கள் கூட இருப்பவர்கள்  உங்களை எதிரியாக்கிவிடுவார்கள் . 

குரோதமும் பகையும் ஊட்டி ஊட்டி வளர்க்கப்படுகின்றனவே தவிர அன்பும் அரவணைப்பும் பாசமும் நேசமும் விழுமியங்கள் அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு விட்டன. 

 வேண்டும் என்ற உள்ளம் நமக்கு விரிவடைந்து கொண்டு போகின்றதே தவிர போதும் என்ற உள்ளம் வருவதே இல்லை. வழியில் போகும் போது ஐம்பது ரூபாய் பணம் கைக்கு கிடைத்து விட்டது என்றால் வீதியில் போகும் போதெல்லாம் காசைத் தேடிக்கொன்டு போகின்றோம்.  ஒரு விடயம் நமக்கு கிடைத்து  விட்டது என்றால் 100 விடயங்களை நமது மனம் வளர்த்துக்  கொள்கின்றது. ஆசை போடுகின்ற சாலையாகத்தான் இன்றைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றது. 

நேரிய வழியில் ஆசைகள் வந்தால் இலாபமும் குறைவு பாவமும் குறைவு.  நிரந்தரமான இன்பத்தை அனுபவித்தவன் என்று யாரும் இல்லை நிரந்தரமான துன்பத்தில் உழன்றவன் என்று யாரும் இல்லை. இறைவனுடைய தராசில இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றது அதனையே திருவள்ளுவர்

   "இடுக்கண் வருங்கால் நகுல அதனை அடுத்தூர்வதப்பொதில் "என்றார். 

பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை. ஒருவருக்கு நல்ல பசி ஏற்படுது ஆனால் சாப்பிடுவதற்கு உணவு இருக்காது. இன்னும் சிலருக்கு போதியளவு சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிட பசி இருக்காது  இன்னும் சிலருக்கு உணவும் இருக்கும் சாப்பிடுவதற்கு பசியும் இருக்கும் ஆனால் சாப்பிட முடியாதளவிந்கு நோய் வந்து வாட்டுது . 

இதுதான் மனிதனோட வாழ்க்கை.  

இறைவனோட சோதனைகள் யாரையும் விடாது. ஆனால் அச்சோதனைகளைத் தாண்டி  நமக்கான வாழ்க்கையை நமக்கான வாய்ப்பை நாம் உருவாக்கி கொண்டு மனத்தெளிவோடு பயணிப்போமானால் வெற்றி நம் கையில்...............

"மனம் தெளிவானால் யாராலும் வீழ்த்தப்படுவதில்லை" - துணிந்து செல் வெற்றி உன் கையில். மனிதனது வாழ்க்கைப்பாதை  பலகோணங்களில் மாறுபடக்கூடியது. எப்படி மாறினாலும் அதற்கேற்ற மனிதர்களாக அதன் பின்னால் ஓட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். போராட்டங்களும் சகிப்புக்களும் ஏமாற்றங்களும் கவலைகளும் கண்ணீருமாக வாழ்க்கை வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது.  அந்தவகையில் யதார்த்த வாழ்க்கைக்கும் சிறுவயது முதல் எமக்குப் போசிக்கப்பட்டு வந்த அறவழி வாழ்வுக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி  "பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்று அடித்து வளர்க்கப்பட்ட காலம் மாறி இன்று  "உண்மையைச் சொல்லாதே உலகத்தில் வாழமாட்டாய்" என்று ஏன் தலைகீழாக மாற்றப்படுகிறார்கள்"எதிரிகளை நான் துவம்சம் செய்கின்றேன் ; அவர்களை நான் எனது நண்பர்களாக்கும் போது" என்று  கூறிய ஆபிரகாம் லிங்கனின் கூற்று இன்று எத்தனை பேரின் வாழ்வில் வெளிச்சத்தை ஈட்டியுள்ளது. எத்தனை பேர் இதனை கடைப்பிடிக்கிறார்கள் இதனை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயன்று பாருங்கள்.   உங்கள் கூட இருப்பவர்கள்  உங்களை எதிரியாக்கிவிடுவார்கள் . குரோதமும் பகையும் ஊட்டி ஊட்டி வளர்க்கப்படுகின்றனவே தவிர அன்பும் அரவணைப்பும் பாசமும் நேசமும் விழுமியங்கள் அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.  வேண்டும் என்ற உள்ளம் நமக்கு விரிவடைந்து கொண்டு போகின்றதே தவிர போதும் என்ற உள்ளம் வருவதே இல்லை. வழியில் போகும் போது ஐம்பது ரூபாய் பணம் கைக்கு கிடைத்து விட்டது என்றால் வீதியில் போகும் போதெல்லாம் காசைத் தேடிக்கொன்டு போகின்றோம்.  ஒரு விடயம் நமக்கு கிடைத்து  விட்டது என்றால் 100 விடயங்களை நமது மனம் வளர்த்துக்  கொள்கின்றது. ஆசை போடுகின்ற சாலையாகத்தான் இன்றைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றது. நேரிய வழியில் ஆசைகள் வந்தால் இலாபமும் குறைவு பாவமும் குறைவு.  நிரந்தரமான இன்பத்தை அனுபவித்தவன் என்று யாரும் இல்லை நிரந்தரமான துன்பத்தில் உழன்றவன் என்று யாரும் இல்லை. இறைவனுடைய தராசில இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றது அதனையே திருவள்ளுவர்   "இடுக்கண் வருங்கால் நகுல அதனை அடுத்தூர்வதப்பொதில் "என்றார். பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை. ஒருவருக்கு நல்ல பசி ஏற்படுது ஆனால் சாப்பிடுவதற்கு உணவு இருக்காது. இன்னும் சிலருக்கு போதியளவு சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிட பசி இருக்காது  இன்னும் சிலருக்கு உணவும் இருக்கும் சாப்பிடுவதற்கு பசியும் இருக்கும் ஆனால் சாப்பிட முடியாதளவிந்கு நோய் வந்து வாட்டுது . இதுதான் மனிதனோட வாழ்க்கை.  இறைவனோட சோதனைகள் யாரையும் விடாது. ஆனால் அச்சோதனைகளைத் தாண்டி  நமக்கான வாழ்க்கையை நமக்கான வாய்ப்பை நாம் உருவாக்கி கொண்டு மனத்தெளிவோடு பயணிப்போமானால் வெற்றி நம் கையில்.

Advertisement

Advertisement

Advertisement