திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (17)மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 30 கிராமும் 700 மில்லி கிராமும் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12, குணசிங்கபுரவை சேர்ந்த 63 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
கிண்ணியா தம்பலகாமம் பிரதான பாதையில் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த நபரை பரிசோதனை செய்ததன் பின் இவ்வாறு ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தம்பலகாமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு நபர் கைது திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கைது நடவடிக்கை இன்று (17)மாலை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 30 கிராமும் 700 மில்லி கிராமும் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12, குணசிங்கபுரவை சேர்ந்த 63 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்கிண்ணியா தம்பலகாமம் பிரதான பாதையில் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த நபரை பரிசோதனை செய்ததன் பின் இவ்வாறு ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.