• Dec 18 2025

முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

Chithra / Dec 17th 2025, 7:19 pm
image


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி நாளை முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக அந்தந்த பயனாளிகள் இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றிருந்ததோடு, இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக அந்தந்த பயனாளிகள் இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றிருந்ததோடு, இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement