• Feb 27 2026

மின்சாரமும் இல்லை; குடிநீரும் இல்லை! தற்காலிக கூடாரங்களில் 23 குடும்பங்களின் அவலநிலை

Chithra / Feb 26th 2026, 6:39 pm
image

 

 

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல – ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள், இன்றும் அடிப்படை வசதிகளின்றித் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.


இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.


தற்போது இவர்கள் வசித்து வரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மழைக்காலங்களில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாலும், மின்சார வசதி இல்லாமையினாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்  துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 


அத்தோடு, 23 குடும்பங்களுக்கு எனப் பொதுவாக 5 மலசலக்கூடங்கள் மாத்திரமே காணப்படுவதால், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தற்போது நிலவும் மாறுபட்ட வானிலை மாற்றங்களால் பல்வேறு தோல் நோய்கள் பரவி வருவதாகவும், முறையான மருத்துவ வசதிகளோ சுகாதாரப் பாதுகாப்போ தமக்குக் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.


எமது அவல நிலை குறித்துப் பலரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. எமக்கென ஒரு எதிர்காலம் இருக்குமா என்றே தெரியவில்லை எனத் தெரிவிக்கும் இம்மக்கள், தமது வீடுகளைப் புனரமைக்க அல்லது நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மின்சாரமும் இல்லை; குடிநீரும் இல்லை தற்காலிக கூடாரங்களில் 23 குடும்பங்களின் அவலநிலை   கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல – ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள், இன்றும் அடிப்படை வசதிகளின்றித் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.தற்போது இவர்கள் வசித்து வரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாலும், மின்சார வசதி இல்லாமையினாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்  துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அத்தோடு, 23 குடும்பங்களுக்கு எனப் பொதுவாக 5 மலசலக்கூடங்கள் மாத்திரமே காணப்படுவதால், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது நிலவும் மாறுபட்ட வானிலை மாற்றங்களால் பல்வேறு தோல் நோய்கள் பரவி வருவதாகவும், முறையான மருத்துவ வசதிகளோ சுகாதாரப் பாதுகாப்போ தமக்குக் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.எமது அவல நிலை குறித்துப் பலரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. எமக்கென ஒரு எதிர்காலம் இருக்குமா என்றே தெரியவில்லை எனத் தெரிவிக்கும் இம்மக்கள், தமது வீடுகளைப் புனரமைக்க அல்லது நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement