• Feb 27 2026

நாளை முதல் அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

Chithra / Feb 26th 2026, 8:03 pm
image

 

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் நாளை (27) முதல் அப்பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் நிகழ்ந்து 93 நாட்கள் கடந்துள்ள நிலையில், அக்காலப்பகுதி முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது தொடர்ச்சியாக சேவையாற்றி, அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான பிரதான இணைப்பாளர்களாகச் செயற்பட்டுள்ளதாக அத்தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், அனர்த்தப் பணிகளுடன் தொடர்புடைய நட்டஈடு மற்றும் மீளளிப்புக் கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கள மட்டத்தில் விசேட பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாங்கள் ஆற்றியுள்ள இந்த அர்ப்பணிப்பான சேவைக்கு ஒப்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாமை காரணமாகவே இவ்வாறானதொரு கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்ததாக அத்தொழிற்சங்கங்கள் மேலும் வலியுறுத்துகின்றன.


நாளை முதல் அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை  அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் நாளை (27) முதல் அப்பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.அதற்கமைய, அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.டித்வா புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் நிகழ்ந்து 93 நாட்கள் கடந்துள்ள நிலையில், அக்காலப்பகுதி முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது தொடர்ச்சியாக சேவையாற்றி, அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான பிரதான இணைப்பாளர்களாகச் செயற்பட்டுள்ளதாக அத்தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.மேலும், அனர்த்தப் பணிகளுடன் தொடர்புடைய நட்டஈடு மற்றும் மீளளிப்புக் கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கள மட்டத்தில் விசேட பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தாங்கள் ஆற்றியுள்ள இந்த அர்ப்பணிப்பான சேவைக்கு ஒப்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாமை காரணமாகவே இவ்வாறானதொரு கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்ததாக அத்தொழிற்சங்கங்கள் மேலும் வலியுறுத்துகின்றன.

Advertisement

Advertisement

Advertisement