• Dec 18 2025

இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட மனித கால் - இதுவரை 21 பேர் மாயம்

Chithra / Dec 17th 2025, 7:15 pm
image

 சீரற்ற  வானிலையால் கொத்மலை - ரம்பொடை பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில்  பெண் ஒருவரின் கால் பகுதி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் இதனைத் தெரிவித்தார்.


கொத்மலை - ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதையொன்று இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் குறித்த கால் பகுதி மீட்கப்பட்டதாகவும், அந்த கால் பகுதியில் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தார்.


கொத்மலை - ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கிய 27 பேரின்  சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 21 பேரை இதுவரை  காணவில்லை.


மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஒன்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.


இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட மனித கால் - இதுவரை 21 பேர் மாயம்  சீரற்ற  வானிலையால் கொத்மலை - ரம்பொடை பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில்  பெண் ஒருவரின் கால் பகுதி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் இதனைத் தெரிவித்தார்.கொத்மலை - ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதையொன்று இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் குறித்த கால் பகுதி மீட்கப்பட்டதாகவும், அந்த கால் பகுதியில் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தார்.கொத்மலை - ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கிய 27 பேரின்  சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 21 பேரை இதுவரை  காணவில்லை.மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஒன்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement