• Dec 18 2025

பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; தாயும், குழந்தையும் பலி

Chithra / Dec 17th 2025, 7:14 pm
image


தெஹியத்தகண்டிய  - முவகம்மன வீதியில் இன்று பிற்பகல் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தெஹியத்தகண்டியவிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் பலத்த காயமடைந்து தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தாயும் ஒரு பிள்ளையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


உயிரிழந்த தாய் 33 வயதானவர் எனவும், குழந்தை 2 வயதானவர் எனவும் இவர்கள் தெஹியத்தகண்டிய, மாவநாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 


விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் 11 வயதுடைய மகனும் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 


பேருந்தின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; தாயும், குழந்தையும் பலி தெஹியத்தகண்டிய  - முவகம்மன வீதியில் இன்று பிற்பகல் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெஹியத்தகண்டியவிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் பலத்த காயமடைந்து தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தாயும் ஒரு பிள்ளையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த தாய் 33 வயதானவர் எனவும், குழந்தை 2 வயதானவர் எனவும் இவர்கள் தெஹியத்தகண்டிய, மாவநாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் 11 வயதுடைய மகனும் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement