தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு, அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத்தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
பௌத்த மரபுகளின் அடிப்படையில், இலங்கையின் மாபெரும் வம்சங்களில் ஒன்றாக அறியப்படும் அமரபுர ஸ்ரீ கல்யான வம்சக் குழுவின் வடஇலங்கை தலைமைச் சங்கநாயகராக தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தெரிவாகியுள்ளார். அவரிடம் அதிகாரங்களைக் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித், புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி ஆகியோர் இந்த நிகழ் வுக்கு இணைத்தலைமை வழங்கவுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட் டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விடயத்துக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், அரசும் பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய மக்கள் சக்தியும் பல்வேறு விடயங்களில் முரண்படுகின்ற போதிலும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சையான பின்னணிகளைக் கொண்ட விடயத்தில், ஓரணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தையிட்டி திஸ்ஸ விகாரையின் தேரருக்கு உயரிய அதிகாரம்; ஓரணியில் செயற்படும் அரசும் - எதிர்க்கட்சியும் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு, அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத்தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம் பெறவுள்ளது.பௌத்த மரபுகளின் அடிப்படையில், இலங்கையின் மாபெரும் வம்சங்களில் ஒன்றாக அறியப்படும் அமரபுர ஸ்ரீ கல்யான வம்சக் குழுவின் வடஇலங்கை தலைமைச் சங்கநாயகராக தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தெரிவாகியுள்ளார். அவரிடம் அதிகாரங்களைக் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித், புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி ஆகியோர் இந்த நிகழ் வுக்கு இணைத்தலைமை வழங்கவுள்ளனர்.தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட் டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த விடயத்துக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.அத்துடன், அரசும் பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய மக்கள் சக்தியும் பல்வேறு விடயங்களில் முரண்படுகின்ற போதிலும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சையான பின்னணிகளைக் கொண்ட விடயத்தில், ஓரணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.