• Dec 18 2025

இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் சந்திப்பு!

Chithra / Dec 17th 2025, 9:06 pm
image


யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.  

இதன்போது நகராட்சி மன்றின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நகராட்சி மன்றிற்கு இந்திய  உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தினால் இந்திய கலைஞர்களைக் கொண்டு யாழில் கலை கலாச்சார நிகழ்வுகளை நடத்துகின்ற வேளை நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்திலும் இந்திய கலைஞர்களைக் கொண்டு நிகழ்வுகளை நடத்துதல், நகராட்சி மன்ற மைதான புனரமைப்பு, சாவகச்சேரி நகராட்சி மன்றத்திற்கும் இந்தியாவில் உள்ள நகராட்சி ஒன்றுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி ஆலோசனை மற்றும் வளப் பரிமாற்றங்களில் ஈடுபடுதல், உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு பயிற்சிகள் மற்றும் நேரடி களத்தரிசிப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை நகராட்சி மன்றத்தினர் முன்வைத்தனர். 

குறித்த விடயங்கள் தொடர்பில் கரிசனையோடு கலந்துரையாடிய துணைத்தூதுவர் நகராட்சி மன்றத்தினரோடும் தமிழ் மக்களின் நலனிலும் ஆதீத அக்கறையுடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம் எனத் தெரிவித்தார். 

இந்திய துணைத் தூதரவருடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாகவும் சிநேகபூர்வமாகவும் இருந்தது என நகராட்சி மன்றத்தினரும் தெரிவித்தனர்.


இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் சந்திப்பு யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.  இதன்போது நகராட்சி மன்றின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நகராட்சி மன்றிற்கு இந்திய  உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தினால் இந்திய கலைஞர்களைக் கொண்டு யாழில் கலை கலாச்சார நிகழ்வுகளை நடத்துகின்ற வேளை நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்திலும் இந்திய கலைஞர்களைக் கொண்டு நிகழ்வுகளை நடத்துதல், நகராட்சி மன்ற மைதான புனரமைப்பு, சாவகச்சேரி நகராட்சி மன்றத்திற்கும் இந்தியாவில் உள்ள நகராட்சி ஒன்றுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி ஆலோசனை மற்றும் வளப் பரிமாற்றங்களில் ஈடுபடுதல், உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு பயிற்சிகள் மற்றும் நேரடி களத்தரிசிப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை நகராட்சி மன்றத்தினர் முன்வைத்தனர். குறித்த விடயங்கள் தொடர்பில் கரிசனையோடு கலந்துரையாடிய துணைத்தூதுவர் நகராட்சி மன்றத்தினரோடும் தமிழ் மக்களின் நலனிலும் ஆதீத அக்கறையுடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம் எனத் தெரிவித்தார். இந்திய துணைத் தூதரவருடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாகவும் சிநேகபூர்வமாகவும் இருந்தது என நகராட்சி மன்றத்தினரும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement