• Dec 18 2025

அனர்த்த நிவாரணங்களில் எம்மை புறக்கணிப்பது ஏன்? கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

shanuja / Dec 17th 2025, 5:00 pm
image

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு,மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (17)போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தங்களுக்கான அனர்த்த அழிவுகளின் போதான நடவடிக்கைகளை இதுவரைக்கும் எவரும் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம் .எனவே நியாயமான தீர்வை பெற்றுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த பகுதியில் 7100 ஏக்கருக்கு ஏக்கர் வரிப்பணம் செலுத்தியுள்ளோம். இதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடுகள் கிடைத்தன. தற்போது மாத்திரம் நாங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியதுடன் பதாகைகளை ஏந்தியவாறு நீதி கோரிய கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


அதனையடுத்து கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியை சந்தித்து கலந்துரையாடினர்.

அனர்த்த நிவாரணங்களில் எம்மை புறக்கணிப்பது ஏன் கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு,மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (17)போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்கான அனர்த்த அழிவுகளின் போதான நடவடிக்கைகளை இதுவரைக்கும் எவரும் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம் .எனவே நியாயமான தீர்வை பெற்றுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் 7100 ஏக்கருக்கு ஏக்கர் வரிப்பணம் செலுத்தியுள்ளோம். இதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடுகள் கிடைத்தன. தற்போது மாத்திரம் நாங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியதுடன் பதாகைகளை ஏந்தியவாறு நீதி கோரிய கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.அதனையடுத்து கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியை சந்தித்து கலந்துரையாடினர்.

Advertisement

Advertisement

Advertisement