மஞ்சள் கடவையால் சென்ற மாணவர் ஒருவரை கன்டர் வாகனம் மோதியதில் மாணவன் சிறுகாயங்களுக்குள்ளானார்.
இந்த விபத்துச் சம்பவம் நீர்கொழும்பு வித்யாலங்கார கல்லூரிக்கு முன்னால் இன்று (17)
காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு வித்யாலங்கார கல்லூரிக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவை ஊடாக காலை மாணவர்கள் சென்றுள்ளனர்.
மாணவப் பிரதிநிதி ஒருவர் பாதசாரிக் கடவையில் பாதுகாப்பு கடமையில் நின்று வாகனங்களை அவதானித்து மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மாணவர்களை பாதசாரி ஊடாக செல்லவிட்டு எதிரே வந்த கன்டர் வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு சைகையைக் காட்டினார்.
எனினும் அந்தக் கன்டர், மாணவனின் சையைக் கடந்து பாதசாரிக் கடவை ஊடாகப் பயணித்தது.
இதன்போதே பாதசாரிக் கடவை ஊடாக சென்ற மாணவர் ஒருவரை மோதியதில் விபத்து சம்பவித்தது.
விபத்தில் சிக்கிய மாணவன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவன் பாதுகாப்பு சைகையைக் காட்டிய வேளை, அதனையும் மீறி பயணித்து மாணவர் ஒருவர் மீது கன்டர் மோதியுள்ளது.
மாணவர் மீது கன்டர் மோதும் காணொளி வெளிவந்து பதறவைத்துள்ளது.
மஞ்சள் கடவையால் சென்ற மாணவரை மோதிய கன்டர்; பதறவைக்கும் காணொளி மஞ்சள் கடவையால் சென்ற மாணவர் ஒருவரை கன்டர் வாகனம் மோதியதில் மாணவன் சிறுகாயங்களுக்குள்ளானார். இந்த விபத்துச் சம்பவம் நீர்கொழும்பு வித்யாலங்கார கல்லூரிக்கு முன்னால் இன்று (17) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு வித்யாலங்கார கல்லூரிக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவை ஊடாக காலை மாணவர்கள் சென்றுள்ளனர். மாணவப் பிரதிநிதி ஒருவர் பாதசாரிக் கடவையில் பாதுகாப்பு கடமையில் நின்று வாகனங்களை அவதானித்து மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களை பாதசாரி ஊடாக செல்லவிட்டு எதிரே வந்த கன்டர் வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு சைகையைக் காட்டினார். எனினும் அந்தக் கன்டர், மாணவனின் சையைக் கடந்து பாதசாரிக் கடவை ஊடாகப் பயணித்தது. இதன்போதே பாதசாரிக் கடவை ஊடாக சென்ற மாணவர் ஒருவரை மோதியதில் விபத்து சம்பவித்தது. விபத்தில் சிக்கிய மாணவன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவன் பாதுகாப்பு சைகையைக் காட்டிய வேளை, அதனையும் மீறி பயணித்து மாணவர் ஒருவர் மீது கன்டர் மோதியுள்ளது. மாணவர் மீது கன்டர் மோதும் காணொளி வெளிவந்து பதறவைத்துள்ளது.