• Dec 18 2025

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபை பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

shanuja / Dec 17th 2025, 4:14 pm
image

மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றிபெறச்செய்யப்பட்டது.


மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு இன்றைய தினம் பிரதேசசபையின் தவிசாளர் இ.கிரேசகுமாரன் தலைமையில் நடைபெற்றது.


இன்றைய அமர்வில் பிரதி தவிசாளர் கபில்நாத் உட்பட பிரதேசசபையின் 15 உறுப்பினர்கள் இன்றைய தினம் சபை அமர்வில் கலந்துகொண்டதுடன் ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை.


இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி அனைத்து உறுப்பினர்களும் தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.


அதனை தொடர்ந்து மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு தவிசாளரின் தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.


இதன்போது கூட்டறிக்கை கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன் தீர்மானங்களும் தவிசாளரினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


அதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டினை விட வருமானம் கூடியதாக இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 10 வட்டாரங்களுக்கும் சமமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.


வரவு செலவு திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்மொழியப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 16 உறுப்பினர்களில் 09 பேர் ஆதரவாகவும் 6பேர் நடுநிலை வகித்ததுடன் ஒருவர் அமர்விற்கு சமூகமளிக்கவில்லை.


இதனடிப்படையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபை பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றிபெறச்செய்யப்பட்டது.மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு இன்றைய தினம் பிரதேசசபையின் தவிசாளர் இ.கிரேசகுமாரன் தலைமையில் நடைபெற்றது.இன்றைய அமர்வில் பிரதி தவிசாளர் கபில்நாத் உட்பட பிரதேசசபையின் 15 உறுப்பினர்கள் இன்றைய தினம் சபை அமர்வில் கலந்துகொண்டதுடன் ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை.இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி அனைத்து உறுப்பினர்களும் தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு தவிசாளரின் தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது கூட்டறிக்கை கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன் தீர்மானங்களும் தவிசாளரினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.அதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டினை விட வருமானம் கூடியதாக இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 10 வட்டாரங்களுக்கும் சமமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.வரவு செலவு திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்மொழியப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 16 உறுப்பினர்களில் 09 பேர் ஆதரவாகவும் 6பேர் நடுநிலை வகித்ததுடன் ஒருவர் அமர்விற்கு சமூகமளிக்கவில்லை.இதனடிப்படையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement