முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள, ஒலுமடு கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட, ஒலுமடுக்குளம் வெள்ள அனர்த்தம் காரணமாக உடைபெடுத்துள்ளதால் தாம் பாதிப்பை எதிர் நோக்கயுள்ளதாக அதன் கீழ் நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் குறித்து ஆராய்ந்துடன், குளத்தின் சீரமைப்பு வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக ஒலுமடுக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் பருவமழை தொடங்கியபிற்பாடு, பொருத்தமற்ற காலப்பகுதியில் ஒப்பந்ததாரர் தொடங்கியதன் காரணமாகவே குறித்த குளம் உடைப்பெடுத்ததாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இதனால் குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள 150 விவசாயிகளின் 280 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை எதிர்வரும் நாட்களில் நீரின்றி பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
எனவே குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும்பொருட்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழைநீரையாவது குளத்தில் சேகரிக்கும் நோக்குடன், உடைந்துள்ள குளக்கட்டின் பகுதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்மெனவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் குறித்த குளம் வெள்ள அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்துள்ள நிலையில், நிரந்தரமான சீரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்குரிய முன்மொழிவுகளை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு உரிய தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விவசாயிகளிடம் தெரியப்படுத்தினார்.
மேலும் குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில், குளக்கட்டினை தற்காலிகமாக சீரமைப்புச் செய்து நீரைச் சேகரிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுப்பதுதொடர்பில் கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியிருந்தார்.
இதன்போது கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதிலளிக்கையில்,
தொடர்மழை பெய்துவருவதால் தற்போது தற்காலிக்சீரமைப்பு வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறிப்பாக குளக்கட்டினை தற்காலிகமாக்சீர்செய்வதற்குரிய உள்ளீடுகளையும், இயந்திரங்களையும் கொண்டுசெல்வதற்கு பாதைப்பிரச்சினை காணப்படுவதாக இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.
எனவே தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் மழையற்ற வானிலை நிலவினால், ஒப்பந்ததாரருடன் தாமும் கலந்துரையாடி விரைவாக குளக்கட்டினை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய ஏற்பாட்டினை தாம் முன்னெடுப்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலுமடுக்குளம் உடைப்பெடுத்ததால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் - ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள, ஒலுமடு கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட, ஒலுமடுக்குளம் வெள்ள அனர்த்தம் காரணமாக உடைபெடுத்துள்ளதால் தாம் பாதிப்பை எதிர் நோக்கயுள்ளதாக அதன் கீழ் நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் குறித்து ஆராய்ந்துடன், குளத்தின் சீரமைப்பு வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறிப்பாக ஒலுமடுக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் பருவமழை தொடங்கியபிற்பாடு, பொருத்தமற்ற காலப்பகுதியில் ஒப்பந்ததாரர் தொடங்கியதன் காரணமாகவே குறித்த குளம் உடைப்பெடுத்ததாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.இதனால் குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள 150 விவசாயிகளின் 280 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை எதிர்வரும் நாட்களில் நீரின்றி பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.எனவே குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும்பொருட்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழைநீரையாவது குளத்தில் சேகரிக்கும் நோக்குடன், உடைந்துள்ள குளக்கட்டின் பகுதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்மெனவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.இந்நிலையில் குறித்த குளம் வெள்ள அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்துள்ள நிலையில், நிரந்தரமான சீரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்குரிய முன்மொழிவுகளை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு உரிய தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விவசாயிகளிடம் தெரியப்படுத்தினார்.மேலும் குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில், குளக்கட்டினை தற்காலிகமாக சீரமைப்புச் செய்து நீரைச் சேகரிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுப்பதுதொடர்பில் கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியிருந்தார்.இதன்போது கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதிலளிக்கையில்,தொடர்மழை பெய்துவருவதால் தற்போது தற்காலிக்சீரமைப்பு வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.குறிப்பாக குளக்கட்டினை தற்காலிகமாக்சீர்செய்வதற்குரிய உள்ளீடுகளையும், இயந்திரங்களையும் கொண்டுசெல்வதற்கு பாதைப்பிரச்சினை காணப்படுவதாக இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.எனவே தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் மழையற்ற வானிலை நிலவினால், ஒப்பந்ததாரருடன் தாமும் கலந்துரையாடி விரைவாக குளக்கட்டினை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய ஏற்பாட்டினை தாம் முன்னெடுப்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.