இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 'டிட்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக ஜீவன் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, 'டிட்வா' சூறாவளியினால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையில், இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்தார்.
இந்தியாவின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் ஆதரவு மலையக மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டதாக இந்திய உயர்ஸ்தானிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையக மக்களின் மறுவாழ்வுக்கான ஆதரவை உறுதிப்படுத்திய இந்தியா நன்றி தெரிவித்த ஜீவன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது, 'டிட்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்காக ஜீவன் தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இந்த சந்திப்பின்போது, 'டிட்வா' சூறாவளியினால் மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.இந்தநிலையில், இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்தார்.இந்தியாவின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் ஆதரவு மலையக மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டதாக இந்திய உயர்ஸ்தானிக தகவல்கள் தெரிவிக்கின்றன.