இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான VietJet, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையிலான தனது முதலாவது நேரடி விமான சேவையை நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
இந்த நேரடி விமான சேவையின் ஆரம்பம், இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், VietJet விமான சேவை இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதை வரவேற்றதுடன், அதன் புதிய சேவைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
VietJet விமான சேவை, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை — செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் — முன்னெடுக்கவுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை மற்றும் வியட்நாம் அரச தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் வெற்றிகரமான தொடர்ச்சியாகவே இந்த நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் VietJet விமான சேவை - அமைச்சர் விஜித வாழ்த்து இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான VietJet, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையிலான தனது முதலாவது நேரடி விமான சேவையை நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.இந்த நேரடி விமான சேவையின் ஆரம்பம், இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், VietJet விமான சேவை இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதை வரவேற்றதுடன், அதன் புதிய சேவைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். VietJet விமான சேவை, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை — செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் — முன்னெடுக்கவுள்ளது.கடந்த ஆண்டு இலங்கை மற்றும் வியட்நாம் அரச தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் வெற்றிகரமான தொடர்ச்சியாகவே இந்த நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.