கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவன் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.
இன்று பரீட்சை எழுதிவிட்டு, வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கடைக்கு சென்றவேளையே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்று கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதி அனுமதிபத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவன் விபத்து; கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவன் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார். இன்று பரீட்சை எழுதிவிட்டு, வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கடைக்கு சென்றவேளையே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்று கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.