• Dec 18 2025

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற நால்வர் கைது

Chithra / Dec 18th 2025, 11:09 am
image


முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற நால்வர் களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்களிடமிருந்து கொலைசெய்யப்பட்ட முதலையும் கூரிய ஆயுதமும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


நான்கு சந்தேக நபர்களும் நேற்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.80,000.00 வீதம் மொத்தம் ரூ.320,000.00 அபராதம் விதிக்கப்பட்டது.. 


முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற நால்வர் கைது முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற நால்வர் களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து கொலைசெய்யப்பட்ட முதலையும் கூரிய ஆயுதமும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.நான்கு சந்தேக நபர்களும் நேற்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.80,000.00 வீதம் மொத்தம் ரூ.320,000.00 அபராதம் விதிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement