• Dec 18 2025

டித்வா தாக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு; 13 வீதிகளில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு!

Chithra / Dec 18th 2025, 12:15 pm
image


டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக சேதமடைந்த 13 வீதிகளில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மத்திய மாகாணத்தில் 9 வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். 

மேலும், ஊவா மாகாணத்தில் ஒரு வீதியிலும், வடக்கு மாகாணத்தில் 2  வீதிகளிலும், வடமேற்கு மாகாணத்தில் ஒரு வீதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சில வீதிகளில்  உள்ள பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை நிர்மாணிக்க வேண்டியிருப்பதுடன், பல வீதிகளில் உள்ள சேதமடைந்த பாலங்கள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

டித்வா தாக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு; 13 வீதிகளில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக சேதமடைந்த 13 வீதிகளில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன்படி, மத்திய மாகாணத்தில் 9 வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். மேலும், ஊவா மாகாணத்தில் ஒரு வீதியிலும், வடக்கு மாகாணத்தில் 2  வீதிகளிலும், வடமேற்கு மாகாணத்தில் ஒரு வீதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில வீதிகளில்  உள்ள பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை நிர்மாணிக்க வேண்டியிருப்பதுடன், பல வீதிகளில் உள்ள சேதமடைந்த பாலங்கள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement