• Apr 16 2026

உள்ளூராட்சி மன்ற இளைஞர் மற்றும் பெண் பிரதிநிதிகளின் திறன்களை மேம்படுத்தும் கருத்தரங்கு!

shanu / Mar 12th 2026, 5:45 pm
image

வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பெண்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கான விசேட அனுபவப் பகிர்வு கருத்தரங்கு அண்மையில் மன்னாரில் வெற்றிகரமாக நடைபெற்றது.


நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பான வொக்கோட் (VOVCOD) இந்த ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.


UNOPS மற்றும் விருத்தித் திட்டத்தின் நிதி அனுசரணையுடன் மன்னார், மடு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்தக் கருத்தரங்கில் மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 11 உள்ளூராட்சி அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இதில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 25 இளைஞர் மற்றும் பெண் பிரதிநிதிகளும், அனுபவம் வாய்ந்த 15 சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சபைத் தலைவர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.


உள்ளூராட்சி மட்டத்தில் ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்துதல், பொறுப்புணர்வுடன் கூடிய தலைமைத்துவத்தை உருவாக்குதல் மற்றும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய நல்லாட்சி முறைகளை (Inclusive Governance) நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.


கடந்த மாதம் வழங்கப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் தொடர்ச்சியாக, உறுப்பினர்கள் களத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் இயற்றிய தீர்மானங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


இந்நிகழ்வில் வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் விசாரணை அதிகாரி  பரமேஸ்வரன் வளவாளராகக் கலந்து கொண்டு, நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.


அத்துடன் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சாந்தசீலன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன் வொக்கோட் அமைப்பின் திட்ட இயக்குனர்  தர்மலிங்கம் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் முடிவில், தமது சபைகளின் ஊடாக வெளிப்படைத்தன்மையான மற்றும் சமூகத்தின் தேவைக்கேற்ற முடிவுகளை எடுப்போம் எனப் பிரதிநிதிகள் அனைவரும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்ற இளைஞர் மற்றும் பெண் பிரதிநிதிகளின் திறன்களை மேம்படுத்தும் கருத்தரங்கு வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பெண்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கான விசேட அனுபவப் பகிர்வு கருத்தரங்கு அண்மையில் மன்னாரில் வெற்றிகரமாக நடைபெற்றது.நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பான வொக்கோட் (VOVCOD) இந்த ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.UNOPS மற்றும் விருத்தித் திட்டத்தின் நிதி அனுசரணையுடன் மன்னார், மடு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந்தக் கருத்தரங்கில் மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 11 உள்ளூராட்சி அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 25 இளைஞர் மற்றும் பெண் பிரதிநிதிகளும், அனுபவம் வாய்ந்த 15 சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சபைத் தலைவர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.உள்ளூராட்சி மட்டத்தில் ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்துதல், பொறுப்புணர்வுடன் கூடிய தலைமைத்துவத்தை உருவாக்குதல் மற்றும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய நல்லாட்சி முறைகளை (Inclusive Governance) நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.கடந்த மாதம் வழங்கப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் தொடர்ச்சியாக, உறுப்பினர்கள் களத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் இயற்றிய தீர்மானங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில் வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் விசாரணை அதிகாரி  பரமேஸ்வரன் வளவாளராகக் கலந்து கொண்டு, நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.அத்துடன் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சாந்தசீலன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன் வொக்கோட் அமைப்பின் திட்ட இயக்குனர்  தர்மலிங்கம் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் முடிவில், தமது சபைகளின் ஊடாக வெளிப்படைத்தன்மையான மற்றும் சமூகத்தின் தேவைக்கேற்ற முடிவுகளை எடுப்போம் எனப் பிரதிநிதிகள் அனைவரும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement