• Apr 16 2026

வவுனியா கல்வாரி பாதயாத்திரிகர்களுக்கு வவுனியா நெளுக்குளம் பொலிஸார் வரவேற்பு!

shanu / Mar 12th 2026, 9:07 pm
image

தவக்காலத்தை முன்னிட்டு மன்னாரில் இருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலம் நோக்கி சென்ற பாத யாத்திரிகர்களை இன்று (12.03) வவுனியா நெளுக்குளம் பொலிஸார் வரவேற்றனர்.


அவர்களுக்கு இளைப்பாறல் இடம் வழங்கப்பட்டு சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் என்பவற்றையும் தொழிலதிபர் நெல்சன் அவர்களின் நிதியுதவியில் நெளுக்குளம் பொலிஸார் வழங்கி வைத்தனர்.


நேற்று மன்னார் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் குரு முதல்வர் தலைமையில் ஆரம்பமான இந்த தவக்கால பாத யாத்திரை இன்று வவுனியாவை வந்தடைந்து.


வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் நின்று நாளை கல்வாரி திருதலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் முடிவடையும்.


இப்பாதயாத்திரையில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.


வவுனியா கல்வாரி பாதயாத்திரிகர்களுக்கு வவுனியா நெளுக்குளம் பொலிஸார் வரவேற்பு தவக்காலத்தை முன்னிட்டு மன்னாரில் இருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலம் நோக்கி சென்ற பாத யாத்திரிகர்களை இன்று (12.03) வவுனியா நெளுக்குளம் பொலிஸார் வரவேற்றனர்.அவர்களுக்கு இளைப்பாறல் இடம் வழங்கப்பட்டு சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் என்பவற்றையும் தொழிலதிபர் நெல்சன் அவர்களின் நிதியுதவியில் நெளுக்குளம் பொலிஸார் வழங்கி வைத்தனர்.நேற்று மன்னார் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் குரு முதல்வர் தலைமையில் ஆரம்பமான இந்த தவக்கால பாத யாத்திரை இன்று வவுனியாவை வந்தடைந்து.வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் நின்று நாளை கல்வாரி திருதலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் முடிவடையும்.இப்பாதயாத்திரையில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement