ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.5 இலட்சத்து 24 ஆயிரத்து 290 பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாட்டுப் பிரதிகள், ஒலிபெருக்கி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சைரன் குழாய்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டபோது, அதற்கான உரிய பற்றுச்சீட்டுகள் வழங்கப்படாமல் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்நாட்டு கணக்காய்வுப் பிரிவின் சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார ஹக்மனவின் உத்தரவின்பேரில் கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் ரூ.5,010 மட்டுமே பொலிஸ் பெட்டகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பதிநாக்க உள்ளிட்ட உயரதிகாரிகளின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் 5.24 இலட்சம் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.5 இலட்சத்து 24 ஆயிரத்து 290 பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாட்டுப் பிரதிகள், ஒலிபெருக்கி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சைரன் குழாய்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டபோது, அதற்கான உரிய பற்றுச்சீட்டுகள் வழங்கப்படாமல் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்நாட்டு கணக்காய்வுப் பிரிவின் சோதனையில் தெரியவந்துள்ளது.இந்த முறைகேடு தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார ஹக்மனவின் உத்தரவின்பேரில் கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்துள்ளனர்.சந்தேகநபருக்கு எதிராக வலப்பனை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனிடையே, மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் ரூ.5,010 மட்டுமே பொலிஸ் பெட்டகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பதிநாக்க உள்ளிட்ட உயரதிகாரிகளின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.