• Mar 13 2026

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்; யாழ். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Mar 13th 2026, 7:29 am
image

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான திகதி குறிக்கப்பட்டது.


அகழ்வுப் பணிகளை முறையாக முன்னெடுக்கும் வகையில் நீதவான் எஸ்.லெனின்குமார் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:


புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டது.


கடந்த காலங்களில் நிலவிய 'டித்வா' புயல் மற்றும் பருவமழை காரணமாகச் சேதமடைந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றிவிட்டு, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளைச் செய்து கொடுக்கவும் பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டது.


வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணித்தா, நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் செம்மணி புதைகுழிப் பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.


கள ஆய்வின் போது புதைகுழிக்குள் இன்னும் நீர் தேங்கி நிற்பது அவதானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள்:


மார்ச் மாதம் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்படும்.


ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன. 


செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்; யாழ். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான திகதி குறிக்கப்பட்டது.அகழ்வுப் பணிகளை முறையாக முன்னெடுக்கும் வகையில் நீதவான் எஸ்.லெனின்குமார் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டது.கடந்த காலங்களில் நிலவிய 'டித்வா' புயல் மற்றும் பருவமழை காரணமாகச் சேதமடைந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றிவிட்டு, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளைச் செய்து கொடுக்கவும் பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டது.வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணித்தா, நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் செம்மணி புதைகுழிப் பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.கள ஆய்வின் போது புதைகுழிக்குள் இன்னும் நீர் தேங்கி நிற்பது அவதானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள்:மார்ச் மாதம் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்படும்.ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement