சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை அடுத்து பல நாடுகள் 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' (WFH) முறையை பின்பற்றி வரும் நிலையில், இலங்கையில் தற்போதைக்கு அத்தகைய முறையைச் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர்வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தியைச் சேமித்து, மக்கள் இயல்பாக முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து விபரித்தார்.
இப்பகுதிகளில் புதிய எரிவாயு கிடங்குகள் மற்றும் எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உலகச் சந்தையில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தை நுகர்வோர் எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாகஅமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும்.
உலகளாவிய விலை உயர்வு காரணமாக இலங்கையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என அவர் மேலும் கூறினார்.
நிர்வாக ரீதியிலான மாற்றங்களை விட, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண அரசு முயன்று வருவதை அமைச்சரின் இந்த உரை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை அமுலாகுமா அமைச்சரின் அறிவிப்பு சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை அடுத்து பல நாடுகள் 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' (WFH) முறையை பின்பற்றி வரும் நிலையில், இலங்கையில் தற்போதைக்கு அத்தகைய முறையைச் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர்வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிசக்தியைச் சேமித்து, மக்கள் இயல்பாக முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து விபரித்தார்.இப்பகுதிகளில் புதிய எரிவாயு கிடங்குகள் மற்றும் எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.திருகோணமலையில் உள்ள பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.உலகச் சந்தையில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தை நுகர்வோர் எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாகஅமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும்.உலகளாவிய விலை உயர்வு காரணமாக இலங்கையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என அவர் மேலும் கூறினார்.நிர்வாக ரீதியிலான மாற்றங்களை விட, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண அரசு முயன்று வருவதை அமைச்சரின் இந்த உரை உறுதிப்படுத்தியுள்ளது.