• Apr 16 2026

ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை- கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்!

shanu / Mar 12th 2026, 2:32 pm
image

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டாரங்களில் காணப்படும்  ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தத்தமது வட்டாரங்கள் உள்ள ஆபத்தான மரங்கள் பற்றிய விபரங்களை உடனடியாக அறியத் தர வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று  இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும்போது தெரிவித்தார்.


இதன்போது அவர்  மேலும் தெரிவிக்கையில், 


சர்வதேச மகளிர் தினத்தை எமது சபையின் ஊடாக நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய உறுப்பினர்களுக்கும், பொறுப்புடன் செயற்பட்ட பிரதேச சபை செயலாளர் உட்பட உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


மகளிர் தினத்தை ஆக்கபூர்வமாக அனுஷ்டிக்கும் வகையில் எமது பிரதேச சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட வட்டாரங்களில் உள்ள சுமார் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்க நாம் ஏற்பாடு செய்த போது, பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைத் திட்டம் பொது மக்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு அமைந்துள்ளது பெருமையான விடயம் ஆகும்.    


எமது சபையின் ஊடாக ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்கப்படுகிறது. அதற்கமைய கேம்பிரிட்ஜ் கல்லூரி மற்றும் கொமர்ஷல் வளாகங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள சிகரெட் விபரங்கள் உடனடியாக அகற்றப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனம் செலுத்தத் தவறினால் வழக்குத் தொடரப்படும். கொமர்ஷல் பகுதியில் உள்ள தரிசு நிலம் மற்றும் கடைகளை குத்தகைக்கு விட்டு 5 இலட்ச ரூபா வரை சபைக்கு வருமானம் திரட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு 2018 இல் கொட்டகலை பிரதேச சபை புதிதாக உருவாக்கப்பட்ட போது, சபையின் சில சொத்துகள், கட்டிடங்கள் முதலானவற்றுக்கு தகுந்த ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால், தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சபை உறுபினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆவணங்களைத் தேடி மீண்டும் சபைக்கு உரித்தானவற்றை சட்டபூர்வாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், எமது பிரதேசங்களில் வீதி ஓரங்களிலும், குடிமனைகளை அண்டிய பகுதிகளிலும் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பலத்த மழை மற்றும் புயலில் மரங்கள் முறிந்து விழுந்தும் வேரோடு சாய்ந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டும்,  வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. எனவே, ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தமது வட்டாரத்தில் காணப்படும் ஆபத்தான மரங்கள் பற்றிய விபரங்களை பிரதேச சபைக்கு அறியத் தந்தால் கிராம சேவகர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவற்றை அகற்றி விட முடியும்.


இப்போது வெயில் காலம் நிலவுவதால், அடுத்த மழை ஆரம்பமாவதற்கு முன்னர் மரங்களை வெட்டும் பட்சத்தில் அழிவுகளிலிருந்து எமது பிரதேசத்தைக் காப்பற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை- கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டாரங்களில் காணப்படும்  ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தத்தமது வட்டாரங்கள் உள்ள ஆபத்தான மரங்கள் பற்றிய விபரங்களை உடனடியாக அறியத் தர வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று  இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும்போது தெரிவித்தார்.இதன்போது அவர்  மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மகளிர் தினத்தை எமது சபையின் ஊடாக நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய உறுப்பினர்களுக்கும், பொறுப்புடன் செயற்பட்ட பிரதேச சபை செயலாளர் உட்பட உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மகளிர் தினத்தை ஆக்கபூர்வமாக அனுஷ்டிக்கும் வகையில் எமது பிரதேச சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட வட்டாரங்களில் உள்ள சுமார் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்க நாம் ஏற்பாடு செய்த போது, பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைத் திட்டம் பொது மக்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு அமைந்துள்ளது பெருமையான விடயம் ஆகும்.    எமது சபையின் ஊடாக ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்கப்படுகிறது. அதற்கமைய கேம்பிரிட்ஜ் கல்லூரி மற்றும் கொமர்ஷல் வளாகங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள சிகரெட் விபரங்கள் உடனடியாக அகற்றப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனம் செலுத்தத் தவறினால் வழக்குத் தொடரப்படும். கொமர்ஷல் பகுதியில் உள்ள தரிசு நிலம் மற்றும் கடைகளை குத்தகைக்கு விட்டு 5 இலட்ச ரூபா வரை சபைக்கு வருமானம் திரட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு 2018 இல் கொட்டகலை பிரதேச சபை புதிதாக உருவாக்கப்பட்ட போது, சபையின் சில சொத்துகள், கட்டிடங்கள் முதலானவற்றுக்கு தகுந்த ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால், தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சபை உறுபினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆவணங்களைத் தேடி மீண்டும் சபைக்கு உரித்தானவற்றை சட்டபூர்வாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், எமது பிரதேசங்களில் வீதி ஓரங்களிலும், குடிமனைகளை அண்டிய பகுதிகளிலும் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பலத்த மழை மற்றும் புயலில் மரங்கள் முறிந்து விழுந்தும் வேரோடு சாய்ந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டும்,  வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. எனவே, ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தமது வட்டாரத்தில் காணப்படும் ஆபத்தான மரங்கள் பற்றிய விபரங்களை பிரதேச சபைக்கு அறியத் தந்தால் கிராம சேவகர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவற்றை அகற்றி விட முடியும்.இப்போது வெயில் காலம் நிலவுவதால், அடுத்த மழை ஆரம்பமாவதற்கு முன்னர் மரங்களை வெட்டும் பட்சத்தில் அழிவுகளிலிருந்து எமது பிரதேசத்தைக் காப்பற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement