நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியாவின், மத்துரட்ட, நில்தண்டஹின்ன, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மண்சரிவுக்கான சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி - தொழுவ, உடுதும்பர, மெததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மூன்றாம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை அதிகாலை 2.30 வரை அமுலில் இருக்கும்.
தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நுவரெலியாவின், மத்துரட்ட, நில்தண்டஹின்ன, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மண்சரிவுக்கான சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கண்டி - தொழுவ, உடுதும்பர, மெததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மூன்றாம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை அதிகாலை 2.30 வரை அமுலில் இருக்கும்.தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.