நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் திருத்தச் சட்டமூலத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகளால் உயர்த்துதல், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் ஆறு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்துதல் ஆகிய முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இதற்கமைய, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்தத் திருத்தச் சட்டமூலத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகளால் உயர்த்துதல், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் ஆறு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்துதல் ஆகிய முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.