• Sep 19 2026

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள்

dorin / Sep 18th 2026, 4:48 pm
image

வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர் 

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது. 

அதன் போது கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டியமைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை எடுக்காதமையை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் , சபை அமர்வில் கலந்து கொள்ளாது புறக்கணித்தனர் 

அதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை, சபா மண்டபத்தினுள் செய்யாது, பிரதேச சபை வளாகத்தினுள் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து , அதில் தவிசாளரை கலந்து கொள்ளுமாறு அழைத்தனர். 

அதற்கு,தவிசாளர் சபையை புறக்கணித்து , வெளியே நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். அவருடன் இணைந்து தமிழரசு கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தாமும் கலந்து கொள்ள மாட்டோம் என நிகழ்வினை புறக்கணித்தனர். 

அதனை அடுத்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர் வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது. அதன் போது கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டியமைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை எடுக்காதமையை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் , சபை அமர்வில் கலந்து கொள்ளாது புறக்கணித்தனர் அதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை, சபா மண்டபத்தினுள் செய்யாது, பிரதேச சபை வளாகத்தினுள் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து , அதில் தவிசாளரை கலந்து கொள்ளுமாறு அழைத்தனர். அதற்கு,தவிசாளர் சபையை புறக்கணித்து , வெளியே நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். அவருடன் இணைந்து தமிழரசு கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தாமும் கலந்து கொள்ள மாட்டோம் என நிகழ்வினை புறக்கணித்தனர். அதனை அடுத்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Advertisement

Advertisement

Advertisement