கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றையதினம்
கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், டித்வா புயலினால் பாதிப்படைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை துரிதகதியில் மீட்டெடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை முன்வைத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதோடு, பல்வேறு விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்குவதற்கு அதிகாரிகள் முன் வருவதோடு,பதிவுகள் மேற்கொள்ளாத பண்ணைகளில் ஏற்பட்ட அழிவுகளுக்கான இழப்பீட்டை கிராம சேவையாளர்களின் உறுதிப்படுத்தலோடு வழங்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, குறித்த விடயம் சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், இரணைமடு மற்றும் அக்கராயன் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாகக் கொண்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட வள்ளங்கள் காணாமல் போயுள்ளன.
எனவே இவ் விடயங்களை கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கக்கூடிய உரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் பல்லவராயன் கட்டு, கிராஞ்சி போன்ற வீதிகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும், புனரமைப்புக்கான பணிகள் தாமதப்படும் வீதிகள் தொடர்பிலும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதேவேளை பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டது.
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மீள்கட்டியெழுப்பல் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டது.
மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக் களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர் பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்ட துடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன .
அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற் சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மக்களின் நலன், மாவட்டத் தின் நிலையான அபிவிருத்தி மற்றும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், மாவட்ட செயலாளர் திரு முரளிதரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு - கிளிநொச்சி கூட்டத்தில் தீர்மானம் கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், டித்வா புயலினால் பாதிப்படைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை துரிதகதியில் மீட்டெடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை முன்வைத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதோடு, பல்வேறு விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்குவதற்கு அதிகாரிகள் முன் வருவதோடு,பதிவுகள் மேற்கொள்ளாத பண்ணைகளில் ஏற்பட்ட அழிவுகளுக்கான இழப்பீட்டை கிராம சேவையாளர்களின் உறுதிப்படுத்தலோடு வழங்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, குறித்த விடயம் சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.மேலும், இரணைமடு மற்றும் அக்கராயன் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாகக் கொண்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட வள்ளங்கள் காணாமல் போயுள்ளன. எனவே இவ் விடயங்களை கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கக்கூடிய உரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.அத்துடன், வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் பல்லவராயன் கட்டு, கிராஞ்சி போன்ற வீதிகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும், புனரமைப்புக்கான பணிகள் தாமதப்படும் வீதிகள் தொடர்பிலும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றார்.இதேவேளை பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டது.டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மீள்கட்டியெழுப்பல் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டது.மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக் களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர் பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்ட துடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன .அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற் சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.மக்களின் நலன், மாவட்டத் தின் நிலையான அபிவிருத்தி மற்றும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், மாவட்ட செயலாளர் திரு முரளிதரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.