• Dec 18 2025

காரைநகர் பிரதேச சபையின் 2026க்கான பாதீடு மேலதிக 6 வாக்குகளால் நிறைவேற்றம்

Chithra / Dec 18th 2025, 1:34 pm
image


காரைநகர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 6 வாக்குகளால் இன்று வியாழக்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது.

இன்று 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தராஜனால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இத்திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும் எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் மேலதிக 6 வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டம் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டபோது பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் வரவு - செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது இத்திட்டத்துக்கு சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமுகமளிக்கவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரே இத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். 

காரைநகர் பிரதேச சபையின் 2026க்கான பாதீடு மேலதிக 6 வாக்குகளால் நிறைவேற்றம் காரைநகர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 6 வாக்குகளால் இன்று வியாழக்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது.இன்று 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தராஜனால் சமர்ப்பிக்கப்பட்டது.இதன்போது இத்திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும் எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் மேலதிக 6 வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.இத்திட்டம் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டபோது பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் வரவு - செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.இதன்போது இத்திட்டத்துக்கு சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமுகமளிக்கவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரே இத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement