• Dec 18 2025

கோவில்களில் அன்னதானம் வழங்க தடையா? – ஜலான் காசிங் சிவன் ஆலயத்தில் சர்ச்சை

Chithra / Dec 18th 2025, 1:07 pm
image

கோவில்களில் அன்னதானம் செய்வது பாரம்பரியமான புனித சேவையாக பார்க்கப்படும் நிலையில், ஜலான் காசிங் சிவன் ஆலயத்தில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இன்று அன்னதானம் செய்ய வந்த ஒரு பெண் பக்தரிடம், ஆலயத் தலைவர் அவமரியாதையாகவும் கடுமையாகவும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இப்படியான அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


“இது யாருடைய தனிப்பட்ட சொத்து கோவிலா?” என மக்கள் கேள்வி எழுப்பி, ஆலய நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


மேலும், இந்த ஜலான் காசிங் சிவன் ஆலயம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது கவலைக்குரியது என்றும், ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் நடத்தை மாற்றப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்களில் அன்னதானம் வழங்க தடையா – ஜலான் காசிங் சிவன் ஆலயத்தில் சர்ச்சை கோவில்களில் அன்னதானம் செய்வது பாரம்பரியமான புனித சேவையாக பார்க்கப்படும் நிலையில், ஜலான் காசிங் சிவன் ஆலயத்தில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று அன்னதானம் செய்ய வந்த ஒரு பெண் பக்தரிடம், ஆலயத் தலைவர் அவமரியாதையாகவும் கடுமையாகவும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இப்படியான அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இது யாருடைய தனிப்பட்ட சொத்து கோவிலா” என மக்கள் கேள்வி எழுப்பி, ஆலய நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.மேலும், இந்த ஜலான் காசிங் சிவன் ஆலயம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது கவலைக்குரியது என்றும், ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் நடத்தை மாற்றப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement