யாழ்ப்பாணம், மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (30) 28 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி கொமாண்டோ பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுத் தமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வழங்குமாறு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய மக்கள், 36 ஆண்டுகள் கடந்தும் தமது பூர்வீக வாழிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது குடியிருப்புக் காணிகள் மட்டுமன்றி, விவசாய நிலங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய சொத்துக்களையும் இழந்துள்ள மக்கள், அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமக்கு, இனியும் வெறும் வாக்குறுதிகளை வழங்காமல் காணிகளை விடுவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மயிலிட்டி மக்களின் நில உரிமைப் பிரச்சினைக்கு இனியும் காலதாமதமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
36 ஆண்டுகளாகத் தொடரும் தமது காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை உரிமைக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதே மயிலிட்டி மக்களின் நிலைப்பாடாக உள்ளது.
சொந்த மண்ணுக்காக 36 ஆண்டுகள் காத்திருப்பு - மீண்டும் வெடித்த மக்களின் ஆதங்கம் யாழ்ப்பாணம், மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (30) 28 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மயிலிட்டி கொமாண்டோ பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுத் தமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வழங்குமாறு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குறிப்பாக, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய மக்கள், 36 ஆண்டுகள் கடந்தும் தமது பூர்வீக வாழிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.தமது குடியிருப்புக் காணிகள் மட்டுமன்றி, விவசாய நிலங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய சொத்துக்களையும் இழந்துள்ள மக்கள், அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.எனினும், தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.பல ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமக்கு, இனியும் வெறும் வாக்குறுதிகளை வழங்காமல் காணிகளை விடுவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன், மயிலிட்டி மக்களின் நில உரிமைப் பிரச்சினைக்கு இனியும் காலதாமதமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.36 ஆண்டுகளாகத் தொடரும் தமது காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை உரிமைக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதே மயிலிட்டி மக்களின் நிலைப்பாடாக உள்ளது.