• Oct 31 2026

இன்று மாலை வெளியே செல்வோரே அவதானம்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

Chithra / Oct 30th 2026, 1:27 pm
image


நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கமைய, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இன்று (30) காலை  வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் திறந்தவெளிகள், மரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இன்று மாலை வெளியே செல்வோரே அவதானம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதற்கமைய, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று (30) காலை  வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் திறந்தவெளிகள், மரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement