• Oct 30 2026

தையல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Ziya / Oct 30th 2026, 12:20 pm
image

தையல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 28 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (29.10.2026) மாலை சிறப்பாக நடைபெற்றிருந்தது.


பெண்களின் தொழில்திறன் மற்றும் சுயதொழில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மல்லாகம் யாழ்ப்பாணத்தில் El Shaddai prayer Ministries மூலமாக ஆறு மாத இலவச பயிற்சி நெறியில் பங்கேற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களினால் தைக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் பாராட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் தங்களது திறன்களைப் பயன்படுத்தி சுயதொழிலில் முன்னேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டன.


இப் பயிற்சி திட்டம் சமூகத்தில் தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தையல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு தையல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 28 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (29.10.2026) மாலை சிறப்பாக நடைபெற்றிருந்தது.பெண்களின் தொழில்திறன் மற்றும் சுயதொழில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மல்லாகம் யாழ்ப்பாணத்தில் El Shaddai prayer Ministries மூலமாக ஆறு மாத இலவச பயிற்சி நெறியில் பங்கேற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களினால் தைக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் பாராட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் தங்களது திறன்களைப் பயன்படுத்தி சுயதொழிலில் முன்னேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டன.இப் பயிற்சி திட்டம் சமூகத்தில் தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement